Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் மிகப் பெரிய ஹிட் ஆகும்.. கிளைமாக்ஸ் வேற லெவல் - சண்டை மாஸ்டர் சிவா...

ஜெய்லர் மிகப் பெரிய ஹிட் ஆகும்.. கிளைமாக்ஸ் வேற லெவல் – சண்டை மாஸ்டர் சிவா கருத்து

- Advertisement -

ஜெய்லர் திரைப்படத்தில் சண்டை மாஸ்டராக பணியாற்றிய சிவா அளித்துள்ள பேட்டி தற்போது ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து திரைப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த படம் சரியாக போகவில்லை. இதேபோன்று இயக்குனர் நெல்சனின் பீஸ்ட் என்ற படத்தை எடுத்தார். இது வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தது. ஜெய்லர் திரைப்படம் இருவருக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தின் 90 சதவீதத்திற்கு மேல் சூட்டிங் முடிந்து விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டும் தான் எடுக்கப்பட வேண்டும். இந்த படத்தில் பணியாற்றியது குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சிவா அளித்துள்ள பேட்டியில், முத்து படத்தில் தாம் சண்டை போடும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்ததாகவும் தற்போது ஜெய்லர் படத்திற்கு மாஸ்டராக உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.

- Advertisement -

இதனை தாம் ரஜினி சாரிடம் தெரிவித்ததை அடுத்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டு எங்களை வீட்டிற்கு அழைத்து பேசினார். உண்மையிலேயே அவர்தான் சூப்பர் ஸ்டார். என் குடும்பத்தினர் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து அன்புடன் நடத்தினார். இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது இது மிகப் பெரிய ஹிட் ஆகும்.

சண்டை காட்சிகள் அதிக அளவில் இந்த படத்தில் உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக எடுத்திருக்கிறோம். இது நிச்சயம் வெற்றியடையும். ரஜினி சார் இந்த வயதிலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் நடித்தார் என்று சண்டை மாஸ்டர் சிவா கூறினார்

Most Popular