Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentரஜினிகாந்தை சங்கி என்றால் கோவம் வரும்.. அப்படியென்றால் ”லால் சலாம்” படத்தில் எப்படி நடிப்பார்.....

ரஜினிகாந்தை சங்கி என்றால் கோவம் வரும்.. அப்படியென்றால் ”லால் சலாம்” படத்தில் எப்படி நடிப்பார்.. கண்கலங்கிய சூப்பர்ஸ்டார்.. ஐஸ்வர்யா அதிரடி பேச்சு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், அனந்திகா, தங்கதுரை உள்ளிட்ட படக்குழு அனைவரும் பங்கேற்றனர். அதேபோல் இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், நெல்சன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து எனது தந்தை சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்தவர். அந்த பெயரை கலங்கப்படுத்த அவரது மகளுக்கு கூட இடம் கிடையாது. என் தந்தை ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்தது கதை பிடித்ததால் மட்டும் தான். என் இயக்குநர் குழு, ஒரு லகான் அணியை போல் தான். இந்த படத்தோட எழுத்தாளர், படத்தொகுப்பாளர் என்று யாரையும் ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மானுக்கு தெரியாது.

இவ்வளவு ஏன், என்னை கொஞ்சமாக தான் தெரியும். ஆனால் இந்த அணியை நம்பி இருவரும் வந்தார்கள். அது எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக நினைக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை பெண்ணாக இருந்தால் படம் இயக்க வாய்ப்பு தர மாட்டார்கள். பெரியா ஆளாக இருந்தாலும் படம் இயக்க வாய்ப்பு கிடைக்காது. புது மனிதர்களுக்கு கூட வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் எங்களுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்காது.

- Advertisement -

அது இங்க இருக்க அனைவருக்கும் நன்றாக தெரியும். அதேபோல் என் குழந்தைகள் இருவரும் எனக்கு மிகப்பெரிய வரம். இந்த படத்திற்காக 2 ஆண்டுகளாக பணியாற்றினேன். அந்த 2 ஆண்டுகளில் அவர்களுடன் நேரம் செலவிட கொஞ்சம் கூட முடியவில்லை. அவர்களின் பிடி பீரியட் மீட்டிங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள்.

- Advertisement -

அதேபோல் பெற்ற பிள்ளைக்கு ஒரு கஷ்டம்னா அப்பா கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்யலாம், கூட இருக்கலாம். ஆனால் இவர் படமே கொடுத்துருக்காரு. அவர் எனக்காக எதுவும் செய்ய தேவையே இல்லை. ஆனால் மீண்டும் சொல்ல விரும்புவது ஒன்று தான். அவர் முழுக்க முழுக்க கதைக்காக மட்டுமே படத்தில் நடித்தார். இதனை பார்த்து கொண்டிருந்த போதே ரஜினிகாந்த் நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார்.

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா, நான் எப்போதும் சோசியல் மீடியால் இருந்து விலகியே இருப்பேன். ஆனால் எனது படக்குழுவினர் சில நேரங்களில் மக்கள் என்ன பேசுகிறார்கள், என்ன விமர்சிக்கிறார்கள் என்பதை தொடர்ந்து கூறுவார்கள். சமீப காலமாக, என்னை சங்கி என்ற வார்த்தை கூறி விமர்சிக்கிறார்கள். அதுகுறித்து விளக்கம் கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். அப்படி சொன்னால் கோவம் வரும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்றும் சங்கி கிடையாது. அவர் சங்கியாக இருந்திருந்தால், அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று பேசியுள்ளார்.

Most Popular