Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஒரு முடிவோட தான் இருக்காங்க.. விஜயை வம்புக்கு இழுக்கும் வரிகள்.. ”ஹுக்கும்” பாடலாசிரியரை அழைத்து பாராட்டிய...

ஒரு முடிவோட தான் இருக்காங்க.. விஜயை வம்புக்கு இழுக்கும் வரிகள்.. ”ஹுக்கும்” பாடலாசிரியரை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!

லிங்கா முதல் அண்ணாத்த வரை ரஜினிகாந்த் நடித்த எந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியையோ, வசூலையோ பெறவில்லை. இதனால் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்களும் அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் விஜய், அஜித் ஆகியோரின் எழுச்சி ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பிரச்சனையை கொடுத்தது.

- Advertisement -

ஜெயிலர் படத்தின் ரஜினி

இந்த சூழலில் வெற்றிபெற கட்டாயத்துடன் பீஸ்ட் புகழ் நெல்சன் திலீப் குமாருடன் ரஜினிகாந்த் கைகோர்த்தார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு என்று பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அண்மையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் வெளியாகியது. பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்த காவாலா பாடல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. தமன்னா ஆடிய கவர்ச்சி நடனம் இளசுகளையும் கவர, குழந்தைகள் முதல் பலரும் அதேபோல் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

சர்ச்சையை ஏற்படுத்திய வரிகள்

இதன்பின்னர் ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிளான ஹுக்கும் பாடம் வெளியாகியுள்ளது. அதில் கொப்பன் விசில கேட்டவன்.. பட்டத்த பறிக்க 4 பேரு.. உள்ளிட்ட ஏராளமான வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

இந்த நிலையில் ஹுக்கும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக பாடலாசிரியர் சூப்பர் சுப்பு கூறும்போது, ரஜினி சார் பாடலை கேட்டுவிட்டு என் போனுக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பினார். அதில், வணக்கம் சுப்பு.. நான் ரஜினிகாந்த் பேசுறேன்.. பாட்டு சூப்பர்.. சூப்பரா வொர்க் ஆகும். ரசிகர்களுக்கு எல்லாம் வேற மாதிரி இருக்கும் பாட்டு என்று பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்த் பாராட்டு

தொடர்ந்து சூப்பர் சுப்பு, ஜெயிலர் படத்தில் ஹுக்கும் மட்டுமல்லாமல் இன்னொரு பாடலையும் எழுதியுள்ளேன். ஹுக்கும் பாடலுக்காக சில காட்சிகளை பார்த்து மிரண்டுவிட்டேன். நிச்சயம் டாக்டர் படத்தை போல் படம் வேற மாதிரி கூஸ்பம்ப் உணர்வை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

Most Popular