Monday, May 13, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் இணையும் சூரரை போற்று கூட்டணி.. செம டிவிஸ்ட்

மீண்டும் இணையும் சூரரை போற்று கூட்டணி.. செம டிவிஸ்ட்

நடிகர் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை சுதா கங்காரா இயக்கினார். இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு பல பெயர்களை வாங்கி கொடுத்தது.

- Advertisement -

மேலும் இந்த படம் ஹிந்தியில் அக்சய்குமார் ரீமேக் செய்து வருகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகாமல் போனது. கொரோனா உச்சத்தில் இருந்ததால் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டிருந்தது.

திரையரங்கம் மூடப்பட்டிருந்ததால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் ஒரு ஆண்டுக்கு மேல் காத்திருந்த நிலையில் இந்த படத்தை அமேசான் ஓ டி டி தளத்தில் நடிகர் சூர்யா விற்று விட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

எனினும் திரையரங்கில் வெளியாகி இருந்தால் கூட இந்த அளவிற்கு பல தரப்பு மக்களிடம் இந்த படம் சேர்ந்திருக்குமா? என தெரியவில்லை. ஆனால் இந்த திரைப்படம் தியேட்டரில் வந்து இருந்தால் சூர்யாவுக்கு அதிக வசூலை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக இது அமைந்திருக்க கூட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளது. நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ஷூட்டிங் முடிவடைகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வாடிவாசல் திரைப்படம் தற்போது மேலும் தாமதமாகலாம் என தெரிகிறது இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை டு படத்தின் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை மேலும் தள்ளி போட்டு இருக்கிறார்.

இதனால் கடுப்பான சூர்யா கங்குவா திரைப்படத்தை நடித்துவிட்டு தமக்கு கிடைக்கும் கேப்பில் மீண்டும் ஒரு படத்தை நடித்து விடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம்.

Most Popular