Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentசூர்யா 42.. வாரணம் ஆயிரம் வைப் கொடுக்கும் சூர்யா.. மொரட்டு வொர்க் அவுட் வீடியோ வெளியீடு!

சூர்யா 42.. வாரணம் ஆயிரம் வைப் கொடுக்கும் சூர்யா.. மொரட்டு வொர்க் அவுட் வீடியோ வெளியீடு!

- Advertisement -

சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களின் ஹாட்ரிக் ஹிட்டிற்கு பின், நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம், கிட்டத்தட்ட 13 மொழிகளில் 3டி மற்றும் 2டியில் உருவாகி வகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்வை மற்றும் கோவாவில் தொடங்கியது. அது கடந்த மாதத்தில் முடிவடைந்தது. சில பாடல் காட்சிகள் படமாக்கட்டப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட்கள் சென்னையில் அமைக்கப்பட்டு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளன. இந்தப் படத்தின் நாயகியாக தோனி பட புகழ் திஷா பட்டானி நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அண்மையில் திஷா பட்டானி சமூகவலைதளங்களில் மார்ஷியல் ஆர்ட் பயிற்சி வீடியோவை வெளியிட்டார். அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் திஷா பட்டானியும் ஆக்‌ஷன் காட்சிகளில் பங்கேற்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் வர இருக்கும் பீரியட் பகுதி காட்சிகள் மார்ச் மற்றும் ஏப்ரலில் படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதனால் நடிகர் சூர்யா தனது உடலை மெருகேற்றி வருகிறார். சூரரை போற்று படத்திலேயே நல்ல உடல் கட்டுடன் இருந்த சூர்யா, இந்தப் படத்திற்காக மீண்டும் வாரணம் ஆயிரம் உடல்கட்டுக்கு மாறி முயற்சித்து வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே வாரண் ஆயிரம் படத்தில் சிக்ஸ் பேக் வைத்து சூர்யா வந்த போது, இளைஞர்களிடையே உத்வேகத்தை அளித்தது. இதன் பின்னர் ஏராளமானோர் உடலை பேண வேண்டும் என்று உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினர். இந்த நிலையில் சூர்யா 42 படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், சூர்யா உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

17 வினாடிகள் ஓடும் வீடியோவில் சூர்யா தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சூர்யாவின் முகத்தை காட்டாமல் இருப்பதால், சூர்யா 42 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது.

Most Popular