Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா.. ஜனவரியில் தொடங்கும் சுதா கொங்கரா படம்.. உடலை குறைக்கும் சூர்யா,...

மீண்டும் அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா.. ஜனவரியில் தொடங்கும் சுதா கொங்கரா படம்.. உடலை குறைக்கும் சூர்யா, துல்கர் சல்மான்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா, திஷா படானி, யோகி பாபு, பாபி டியோல், கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

- Advertisement -

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொடைக்கானலில் செட் அமைக்கப்பட்டு பீரியட் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது, கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்ட படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படப்பிடிப்பும் போது சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால், சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் டிசம்பர் கடைசி வாரத்தில் கங்குவா படத்தின் முழு படப்பிடிப்பும் முழுவடையும் என்று பார்க்கப்படுகிறது. இதன்பின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படும். இதனிடையே நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

- Advertisement -

அந்த படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், வில்லனாக தமன்னாவின் காதலர் விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். அதேபோல் நாயகியாக நஸ்ரியா நசீம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர்கள் அரசியலில் களமிறங்குவதை போன்ற கதையும் என்று பார்க்கப்படுகிறது. சூரரைப் போற்று படத்திற்கு பின் மீண்டும் அதே கூட்டணி இணையவுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஜனவரி மாதம் இறுதியில் சூர்யா – சுதா கொங்கரா படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இதன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷூட்டிங் அமெரிக்கன் கல்லூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Most Popular