Sunday, September 15, 2024
- Advertisement -
HomeEntertainmentசுடுகாட்டில் வெறியாட்டம் ஆடும் சூர்யா.. கங்குவா படத்தின் அசத்தல் போஸ்டர் வெளியீடு.. போஸ்டர் வந்த முக்கிய...

சுடுகாட்டில் வெறியாட்டம் ஆடும் சூர்யா.. கங்குவா படத்தின் அசத்தல் போஸ்டர் வெளியீடு.. போஸ்டர் வந்த முக்கிய அறிவிப்பை பாருங்க

அண்ணாத்த படத்திற்கு பின் சிறுத்தை சிவாவும், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யாவும் இணைந்து கங்குவா படத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து கங்குவா படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா, திஷா படானி, பாபி டியோல், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவிலேயே சூர்யா கழுகுடன் வித்தியாசமான லுக்கில் இருந்ததால், படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதுமட்டுமல்லாமல் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களின் வெற்றியால் சூர்யா பான் இந்தியா ஹீரோவாக பார்க்கப்படுகிறது. இதனால் 10 மொழிகளில் கங்குவா திரைப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது.

இதனிடையே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகியது. அதில் கங்குவா படத்தில் சூர்யாவின் லுக் வெளியாகியது. நீண்ட தலை முடியுடன் கழுத்தில் மண்டை ஓடு மாலைகள் அணிந்து ஒரு போருக்கு நடுவில் இருப்பது போல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது.

- Advertisement -

அதேபோல் சூர்யாவை கடந்து வேறு எந்த கதாபாத்திரங்களின் அறிமுகமும் செய்யப்படாததால், படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. கோவா, சென்னை, கொடைக்கானல், கர்நாடகா, தாய்லாந்து என்று வெவ்வேறு பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கிளைமேக்ஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த படம் மாவீரன் படம் போல் சமகாலம் மற்றும் பீரியட் கதையாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு கங்குவா படத்தில் ரிலீஸ் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யாவின் முழுமையான லுக் வெளியாகி, நடனமாடுவது போல் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால், சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Most Popular