Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா - சிறுத்தை சிவா கூட்டணி .. இசை அமைப்பாளர் யார் தெரியுமா?

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி .. இசை அமைப்பாளர் யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறுத்தை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிவா. இந்த படத்தின் மூலம் தான் இவர் பிரபலமானார் இதனால் தான் ரசிகர்கள் இவரை சிறுத்தை சிவா என்று அழைக்கிறார்கள். மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிகளிலும் இவர் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

தன்னுடைய முதல் படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார் .அதன் பின் அவர் வீரம்,விவேகம், வேதாளம், விஸ்வாசம் என்று நான்கு படங்களை இயக்கியிருந்தார். இந்த நான்கு படங்களிலுமே நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து திரைப்படங்களும் வெற்றி பெற்றது. தல ரசிகர்களிடம் பெரும் அளவு வரவேற்கப்பட்ட படங்களில் இவை நாளும் இடம்பெறும்.

- Advertisement -

தொடர்ந்து அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கதாநாயகனாகக் கொண்டு அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இதுவரை இவர் எடுத்த படங்களில் அண்ணாத்தை திரைப்படம் ரசிகர்களிடையே சற்று குறைவான வரவேற்பையே பெற்றது. ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்த படமும் வசூலில் குறைந்ததில்லை என்பதை அண்ணாத்தை திரைப்படமும் நிரூபித்தது

- Advertisement -

தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யாவுடன் தன்னுடைய அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறார். நடிகர் சூர்யாவை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல் ஏழைகளுக்கு கல்வி கொடுக்கும் ஒரு நல்ல சேவகன் ஆகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். .

நடிகர் சூர்யா தற்பொழுது வணங்கான், வாடிவாசல் என்று திரைப்படங்களை நடித்து வருகிறார். ஆனால் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படம் படப்பிடிப்பு தற்பொழுது நிறுத்தப்பட்டு இருக்கிறது.இதற்கு இடையில் நடிகர் சூர்யா சிறுத்தை சிவாவோடு திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை சூரியா 42 என்று அழைக்கிறார்கள்.

சிறுத்தை சிவா படம் எப்போதும் கிராமத்துப் பின்னணியில் இருக்கும். ஆனால் சூர்யாவுடன் இணைய உள்ள இந்த படம் நகரத்தை பின்னணியில் கொண்டு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்று ஒரு தகவல் வெளியானது.ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் மற்றும் வேகம் திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆனால் இந்த செய்தி தவறானது என்றும் சூர்யா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாந் இசையமைக்கிறார் என்று தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவரும் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கிய வீரம் திரைப்படத்திற்கு இசையமைத்து வெற்றி பெற செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular