Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentசுழல் 2ம் பாகத்தை அறிவித்த அமேஸான் நிறுவனம்.. கதையில் இணைந்த மஞ்சிமா மோகன், கவுரி கிஷன்,...

சுழல் 2ம் பாகத்தை அறிவித்த அமேஸான் நிறுவனம்.. கதையில் இணைந்த மஞ்சிமா மோகன், கவுரி கிஷன், லால்!

இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தலைமையில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, பிரேம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய வெப் சீரிஸ் சுழல். சிறுமிகளுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் பாலியல் பிரச்சனையை சந்தித்து வருவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த இணையத் தொடர் இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ஒரு சிறிய கிராமம், அந்த கிராமத்தில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலைக்கு காரணம், அதற்கு பின்னிருக்கும் தொழிற்சாலை என்று கிராமத்தின் மிகப்பெரிய திருவிழாவான மசானா கொள்ளைக்கு இடையில் நடக்கும் காட்சிகள் என்று ரசிகர்கள் மிரண்டு போயினர். தமிழில் வந்த மிகச்சிறந்த இணையத் தொடர்களில் ஒன்றாக அமைந்தது.

இந்த கதையின் கிளைமாக்ஸ் காட்சியில் தனது தங்கையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த தனது சித்தப்பாவை ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்வது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற அமேஸான் நிறுவனத்தின் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சுழல் 2ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.

- Advertisement -

இந்த கதையிலும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாக தெரிகிறது. அதேபோல் பழைய கதாபாத்திரங்களான ஸ்ரெயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் இல்லாமல் லால், சரவணன், மஞ்சிமா மோகன், கவுர் கிஷன், மோனிஷா பிளஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஹரினி, அபிராமி, சாந்தினி உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த கதையையும் பிஷ்கர் – காயத்ரி தலைமையில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜூன் இருவரும் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுழல் முதல் பாகத்தில் சிறுவர்களின் காதல் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை சுழல் 2வில் சிறப்பாக மாற்றங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular