Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாதங்கமான வாய்ப்பை தவறவிட்ட தமிழ் சினிமா.. 10 நாள் போச்சே! பிரபாஸ்க்கு லக்

தங்கமான வாய்ப்பை தவறவிட்ட தமிழ் சினிமா.. 10 நாள் போச்சே! பிரபாஸ்க்கு லக்

ஒவ்வொரு வருடமும் பொங்கல் தீபாவளி புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் புது திரைப்படங்களை திரையரங்குகளை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.அதற்கு காரணம் பண்டிகையை கொண்டாடும் விதத்திற்காக மட்டுமல்ல அந்த பண்டிகைக்காக விடப்படும் விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் திரைப்படத்தை பார்க்க வருவார்கள். அது திரைப்படத்தை வெளியிடுபவருக்கும் திரையரங்குகள் நடத்துபவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

- Advertisement -

இந்த நாட்களில் எல்லாம் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு குடும்பத்துடன் பார்வையாளர்கள் வந்து செல்வார்கள்.இதன் மூலம் அந்த தினங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு வசூல் ரீதியாக ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும். சில நேரங்களில் சாதாரண நடிகர் நடிகைகளின் படம் வந்தால் கூட ஓரளவு நல்ல வரவேற்பை பெறலாம்.

அதேபோல் கோடை விடுமுறை அரையாண்டு விடுமுறை என்றெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை குறி வைத்து திரைப்படங்களை வெளியிடுவார்கள். அப்பொழுது வெளியிடப்படும் திரைப்படங்களுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

- Advertisement -

விடுமுறையில் தானே பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள். எங்காவது வெளியே செல்லலாம் என்றால் முதலில் தோன்றுவது திரைப்படங்கள் தான் அதற்காக திரையரங்குகளை நோக்கி நிச்சயம் அனைவரும் வந்தே தீருவார்கள். அப்படி லாபத்தை பலரும் பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான அரையாண்டு விடுமுறை தொடங்கி விட்டது. ஆனால் இந்த பத்து நாட்களிலும் எந்தவிதமான திரைப்படங்களும் பெரிய அளவில் வெளியிடப்படுவதாக இல்லை. சலார், டங்கி போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டாலும் இதற்கெல்லாம் குழந்தைகள் விரும்பி வர மாட்டார்கள் . குடும்பத்துடன் வந்து பார்க்கும் அளவிற்கு ஒரு நல்ல கதை உள்ள திரைப்படம் என்று எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்நாள் தான் வெளிவருகிறது. ஆனால் அதுவும் தற்பொழுது சில காரணங்களால் வருகின்ற ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். அதேபோல் நீண்ட நாட்களாக படப்பிடிப்பிலேயே இருந்து என்றாவது வெளியாகி விடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படமாவது இந்த விடுமுறை நாட்களில் வெளியிட்டு இருக்கலாம்.

அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படமும் ஜனவரி மாதத்திற்கு நகர்ந்துவிட்டது. இவ்வாறான திரைப்படங்கள் ஆவது இந்த விடுமுறை நாட்களில் வெளியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு நல்ல வரவேற்பை பெறுவதுடன் மக்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்திருக்கும்.

இந்த ஆண்டிற்கான அரையாண்டு விடுமுறையில் யாரும் திரைப்படம் பார்க்க செல்லலாம் என்று யோசித்தால் எந்த திரைப்படமும் சிந்தனையில் சிக்கவில்லை அந்த அளவிற்கு ஏமாற்றத்தை அடைந்து விட்டார்கள் ரசிகர்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இதில் ஏமாற்றம் அடைந்தது ரசிகர்கள் மட்டுமல்ல திரைப்பட ஊழியர்களும் தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல் சற்று சிந்தித்து இந்த விடுமுறையை பயன்படுத்தி இருந்தால் அவர்களுக்கும் நன்மையாக இருக்கும் ரசிகர்களும் ரசித்திருப்பார்கள்.

அதிலும் இந்த ஆண்டு இயற்கையும் சதி செய்து விட்டது. அந்த சதி திரைப்படங்களுக்கு ஒரு நல்வழி காட்டி இருக்கும் திரும்பும் பக்கமெல்லாம் மழையும் வெள்ளமும் பெருகி இருக்கிறது. எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று கூட தற்பொழுது முடிவு செய்ய அனைவரும் அஞ்சுகிறார்கள்.இந்த சமயத்தில் நல்ல திரைப்படம் வெளியிடப்பட்டிருந்தால் நிச்சயமாக மக்கள் அதைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். நல்ல வாய்ப்பை நழுவ விட்டது தமிழ் சினிமா.

Most Popular