சினிமா

துணிவு, வாரிசு ரிலீஸ் எதிரொலி! ஒரே நாளில் 7 படங்கள் போட்டி

தமிழ் சினிமாவின் டாப் 2 நடிகர்களாக கருதப்படும் விஜய், அஜித் ஆகியோர்களின் வாரிசு துணிவு திரைப்படம் ஒரே நாளில் திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி கடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மற்ற படங்கள் கடந்த இரண்டு வாரமாக ரிலீஸ் செய்யப்படவில்லை. மக்களும் இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு படத்திற்கு ஆர்வம் காட்ட வில்லை.

Advertisement

இதனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த அவதார் 2 திரைப்படமே தமிழகத்திலிருந்து பெரும்பான்மையான திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது இரண்டு வாரமாக எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் பிப்ரவரி மூன்றாம் நாள் ஒரே நாளில் ஏழு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் 7 படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள் தான். இதில் முகம் தெரிந்த ஹீரோக்கள் நடித்தது 6 படங்கள் ஆகும். ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள ரன் பேபி ரன், பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீசாகிறது.

இதேபோன்று விஜய் சேதுபதி சுதீப் கிஷன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ள மைக்கேல் திரைப்படமும் அதே நாளில் போட்டி போடுகிறது. இரண்டு படங்களுக்கும் தான் பெரும்பான்மையான திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், யோகி பாபு நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் ஹீரோவாக நடித்துள்ள பொம்மை நாயகி படமும் பிப்ரவரி 3ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

Advertisement

இதை தவிர  சமுத்திரக்கனி, சரவணன் எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ள நான் கடவுள் இல்லை திரைப்படமும் , சமுத்திரக்கனி, கதிர் ஆகியோர் நடித்துள்ள  தலைக்கோதல் மற்றும் குற்றப்பின்னணி  ஆகிய மூன்று படங்கள் பிப்ரவரி 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளன. இதில் பொம்மை நாயகி மற்றும் தலை கோதுமை படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் போதிய திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் வசூல் ரீதியாக தோல்வியில் முடியும் என அஞ்சப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top