Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஅமிதாப் பச்சனுடன் ஸ்டைலாக இருக்கும் ரஜினிகாந்த்.. முடிவுக்கு வந்த மும்பை படப்பிடிப்பு.. ஏப்ரலில் ரிலீஸ் பண்ணிருவாங்க...

அமிதாப் பச்சனுடன் ஸ்டைலாக இருக்கும் ரஜினிகாந்த்.. முடிவுக்கு வந்த மும்பை படப்பிடிப்பு.. ஏப்ரலில் ரிலீஸ் பண்ணிருவாங்க போலயே

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட்டடித்தது. ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், யோகி பாபு, வசந்த் ரவி, சரவணன் உள்ளிட்ட ஏராளமான நடித்து அசத்தினார்.

- Advertisement -

மொத்தமாக ரூ.600 கோடி அளவிற்கு பிரம்மாண்ட வசூலை ஜெயிலர் படம் ஈட்டியது. இதன் மூலமாக 2.0, காலா, அண்ணாத்த, தர்பார் படங்களின் தோல்விக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையும் இன்னும் சில காலம் அதிகரித்துள்ளது என்றே பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மும்பையில் உள்ள காதர் மொய்தீன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏற்கனவே இதுதொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஃபகத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அமிதாப் பச்சன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கபாலி லுக்கில் நடித்து வருகிறார். அண்மையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்தது. நடிகர் அமிதாப் பச்சன் – ரஜினிகாந்த் இருவரின் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் மும்பை படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தலைவர் 170 திரைப்படம் ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Most Popular