Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67 படக்குழுவில் ஏஜெண்ட் டீனா.. வெளியான சர்பரைஸ் வீடியோ.. விஜய் காட்டிய பெரிய மனசு

தளபதி 67 படக்குழுவில் ஏஜெண்ட் டீனா.. வெளியான சர்பரைஸ் வீடியோ.. விஜய் காட்டிய பெரிய மனசு

- Advertisement -

தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாக உள்ளது. மாலை 5 மணிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்கப்படும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு பட குழு ஒரு சர்ப்ரைஸ் வீடியோவை கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதில் தளபதி 67 திரைப்படத்திற்காக படக்குழு காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றது.

இதன் வீடியோவை தற்போது பட குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அனைவரும் தனி விமானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது காரில் வரும் நடிகர் விஜய் தனக்கான இருக்கையில் முதலில் அமர்கிறார். பிறகு விமானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நடந்து சென்று ஒவ்வொரு வரிசையாக ஹாய் என்று கூறி வரவேற்றார்.

- Advertisement -

இதன் பிறகு இந்தக் காட்சியை வீடியோ எடுத்த நபரிடமிருந்து கேமராவை வாங்கி நடிகர் விஜய் அனைவரையும் வீடியோ எடுத்தார். பிறகு படத்தில் இடம்பெற்றுள்ள கலைஞர் ஒருவர் நடிகர் விஜயின் வரைபடத்தை அவருக்கு பரிசாக அளித்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் பயணக் குழுவில் இடம் பெற்றுள்ள சிறுமியை அழைத்து கொஞ்சி விளையாடினார்.
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் விஜய் பட குழுவினரை மட்டும் சந்திக்காமல் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பைலட்கள் என அனைவரையும் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார் .விஜய்  ஒவ்வொரு குழுவினரையும் வரவேற்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இதனிடையே இந்த வீடியோவில் ஏஜென்ட் டீ னாவும் இடம்பெற்று இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  இதனால் இது விக்ரமுக்கு முன்னாள் நடந்த கதையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

Most Popular