Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியால் அடித்தது ஜாக்பாட்… தமிழ் சினிமாவிலேயே இல்லாத அளவுக்கு...

விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியால் அடித்தது ஜாக்பாட்… தமிழ் சினிமாவிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு விலை போன ஆடியோ உரிமை

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை மிகப்பெரிய தொகையில் டி-சீரியஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

பட்டையைக் கிளப்பிய நா ரெடி பாடல்

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.
லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் பாடல்களின் வரிகளும் புதுவித அனுபவத்தை தந்துள்ளது.

வேகம் எடுக்கும் விஜய் 68 பட வேலைகள்

லியோ படத்திற்கு பிறகு விஜயின் அடுத்த படத்தைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு அப்படத்தை இயக்கவுள்ளார். இந்த செய்திதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கிறது. விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படம் வித்யாசமான ஜானரில் இருக்கும்.

- Advertisement -

அதே சமயத்தில் கமர்ஷியல் படமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக ஜோதிகாவை நடிக்க வைக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. படத்திற்கு வழக்கம்போல வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பிறகு விஜயுடன் யுவன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

மிகப்பெரிய தொகையில் கை மாறிய ஆடியோ உரிமை

படத்தில் விஜயுடன் நடிகர் ஜெய் நடிப்பதாகவும் கூறப்பட்டது. பகவதி திரைப்படத்திற்கு பிறகு விஜயுடன் இணைவதால், இருவரும் மீண்டும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் விஜய் 68 வது படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய்யுடன் இணைந்து இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில் தற்போது அதன் ஆடியோ உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விலை போய் உள்ளது. அக்டோபர் மாதம் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் நிலையில், அந்த மாதத்திலேயே விஜய் – வெங்கட் பிரபு படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Most Popular