Thursday, May 9, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 படத்தில் 4 ஹீரோயின்கள்.. வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள புதிய அப்டேட்.. !

தளபதி 68 படத்தில் 4 ஹீரோயின்கள்.. வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள புதிய அப்டேட்.. !

தளபதி விஜய் அடுத்தடுத்து இரண்டு பெரிய பிராஜெக்ட்டில் கமிட் ஆகியுள்ளார் எனக் கூறுவதை விட தளபதி விஜய் கமிட் ஆகும் பிராஜெக்டெல்லாம் பெரிய படம் என்கின்ற அளவிற்கு உச்சத்தில் உள்ளார். கோலிவுட்டின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜிடன் கைகோர்த்து லியோ படத்தினை உருவாக்கியுள்ளார்.

- Advertisement -

மிகப் பெரிய பட்டாளதுடன் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரீலீஸ் ஆகிறது. அதன் பின்னர் தளபதி விஜய் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்று காந்தி ஜெயந்தி விடுமறையில் விஜய் ரசிகர்களுக்கு இரு பெரிய அப்டேட்டை இரு படக்குழுவும் கொடுத்துள்ளது.

லியோவைப் பொறுத்தவரை அக்டோபர் 5ஆம் தேதி டிரெய்லர் வெளியாகக் காத்திருக்கிறது. மறுபக்கம் வெங்கட் பிரபு தளபதி 68 படப்பிடிப்பு இந்த மாதம் முதல் துவங்கும் என்னும் அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறியுள்ளார். இந்த இருச் செய்திகளும் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் பூஜை நாளை நடக்கிறது. அதன் பின்னர் பாடல் ஷூட்டிங்குடன் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறது படக்குழு. படத்தின் முதற்கட்ட பணிகளுக்காக விஜய்யும் வெங்கட் பிரபு & கோவும் வெளிநாடு சென்று வந்துவிட்டனர். அந்த புகைப்படங்களைக் கூட இயக்குனர் வெளியிட்டார் என்பதனை நாம் அறிவோம்.

- Advertisement -

தளபதி 68 படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் முதற்கொண்டு அனைத்து செய்திகளும் லியோ படம் வெளியீட்டுக்குப் பின்னரே என இயக்குனர் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் சமூக வலைதளங்களில் சில தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன. பல மாதங்களாக தளபதி 68 நாயகி யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நான்கு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கவிருக்கிறார்கள். அவர்கள் பிரியங்கா அருள் மோகன், மீனாக்ஷி சவுதிரி, ஸ்னேஹா மற்றும் லைலா ஆவர். இத்தனை ஹீரோயின்கள் எனக் கேட்கும் போதே பெரிய சம்பவத்தை வெங்கட் பிரபு தரவுள்ளார் எனத் தெரிகிறது. இவர்கள் தவிர படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் வைபவ் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Most Popular