Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசினிமாவந்துவிட்டது அப்டேட்.. தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக்.. தலைப்பு என்னவாக இருக்கும்.. !

வந்துவிட்டது அப்டேட்.. தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக்.. தலைப்பு என்னவாக இருக்கும்.. !

லியோ படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மங்காத்தா ஷூட்டிங்கில் அஜித் – விஜய் – வெங்கட் பிரபு ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டதை அடுத்து தளபதியுடன் எப்போது இணைவார் எனும் எதிர்பார்ப்புகள் பல ஆண்டுகளாக இருந்தது.

- Advertisement -

ஒரு வழியாக அது தற்போது நிறைவேறியுள்ளது. அக்டோபர் முதல் வாரம் துவங்கிய ஷூட்டிங் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு கோடையில் வெளியீட்டை எதிர்பார்க்கலாம். வெளிநாடு மற்றும் சென்னை என ஷூட்டிங் தீவிரமாக நடக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பூஜை வீடியோவும் நடிப்பவர்களுன் பட்டியலை மட்டுமே அறிவிப்பாக வழங்கியுள்ளது. இந்தப் படம் ஹாலிவுட் திரைப்படம் லூப்பர் (2012) பாணியில் இருக்கும் என தகவல்கள் வெளியாகின. அப்படியானால் முதல் முறையாக தளபதி விஜய் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையான டைம் டிராவல் படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

மாநாடு படத்தில் டைம் லூப் கான்செப்ட்டை பக்காவாக காட்டிய வெங்கட் பிரபுவை நம்பி எதிர்பார்க்கலாம். லியோ வெற்றி விழாவை முடித்துவிட்டு தாய்லாந்து பறந்த விஜய் தன் காட்சிகளில் நடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பிவிட்டார். படக்குழு மேலும் சில நாட்கள் தங்கி மீதம் இருக்கும் காட்சிகளை ஷூட் செய்து முடித்துவிட்டு வந்துவிட்டது.

- Advertisement -

அண்மையில் சென்னையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்திலும் கார் சேசிங் காட்சி தான் ஷூட் செய்தனர். படத்தில் நிறைய ஆக்சன்களை எதிர்பார்க்கலாம். ஒரு பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தாலும் ரசிகர்கள் எதாவது அப்டேட் வருமா என காத்திருக்கின்றனர்.

அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த வித அப்டேட்களையும் நாம் கான இயலாது. தொடந்து ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. தலைப்பு என்னவென்று கான மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதை விட ‘ தி வெங்கட் பிரபு …. ‘ என்னவாக இருக்கும் என்பதற்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தி. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் வெங்கட் பிரபு & கோ பூர்த்தி செய்யும்.

Most Popular