Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ ஃபீவரே குறையல.. அதுக்குள்ள வெளி வந்த தளபதி 68 அப்டேட்.. நாளை வரப்போகும் ஸ்பெஷல்...

லியோ ஃபீவரே குறையல.. அதுக்குள்ள வெளி வந்த தளபதி 68 அப்டேட்.. நாளை வரப்போகும் ஸ்பெஷல் வீடியோ.. எங்க அந்த விடாமுயற்சி படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. அக்.19ல் வெளியாகிய லியோ படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் விமர்சனங்கள் எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை.

- Advertisement -

முதல் நாளில் மட்டும் ரூ.148.5 கோடி வசூலித்த லியோ திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. 4 நாட்கள் வார இறுதி விடுமுறை முடிவில் லியோ திரைப்படம் மொத்தமாக ரூ.402 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் சினிமா வாழ்க்கையில் லியோ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை அக்.3ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஸ்நேனா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோல் விஜய், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். லியோ திரைப்படம் வெளியாகாததால், படத்தின் பூஜை தொடர்பாக எந்த புகைப்படங்களும், வீடியோவும் வெளியிடப்படவில்லை. தற்போது லியோ திரைப்படம் வெளியாகி வசூலை குவித்து வரும் நிலையில், தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது.

- Advertisement -

நாளை மதியம் 12.05 மணிக்கு தளபதி 68 பூஜை வீடியோ வெளியாகும் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வீடியோவுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஸ்பெஷல் மியூசிக் ஒன்றை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ மூலமாக படத்தின் தொழிற்நுட்ப கலைஞர்கள், நடிகர்களின் முழு விவரமும் தெரிய வரும் என்று பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், விஜய் தனது ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Popular