நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்திற்காக விறுவிறுப்புடன் பணியாற்றி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளார். விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் இணைந்திருப்பதால் வழக்கம் போல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெங்கட் பிரபு படம் என்றாலே வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும் என்பதால், விஜய்க்கு சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அண்மையில் மாநாடு படத்தை குறிப்பிட்டு “லூப் தொடரும்” என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மாநாடு படத்தின் இரண்டாம் பாகத்தை சொல்கிறாரா? தளபதி 68 படத்தில் “டைம் லூப்” இருக்கும் என்பதை சொல்கிறாரா? என குழம்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் லூட்டர் படத்தின் ரீமேக்காக இருப்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக விஜய்-க்கு ஏராளமான லுக் டெஸ்ட்-கள் நடத்தப்பட்டதாகவும், தொழிற்நுட்ப ரீதியாக சரியாக இருக்க வேண்டும் என்பதாலேயே அதிக செலவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 68 படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளனர். தற்போது வெங்கட் பிரபு கையில் டீ கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
துருக்கி மட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பல நாடுகளில் எடுக்கப்படும் விஜய்யின் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மாநாடு படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரவுவை அழைத்து நடிகர் விஜய் நேரில் பாராட்டி இருந்தார்.
அப்போது தான் இருவரும் படம் செய்யலாம் என்று பேசப்பட்டது. டைம் லூப் கான்செப்டில் ஏதாவது கதை இருக்கிறதா என்று விஜய் கேட்டதாகவும், அதற்கு வெங்கட் பிரபு எழுதிய கதை தான் தளபதி 68 என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மாநாடு படத்தை போல் தளபதி 68 படத்திலும் ஏராளமான நடிகர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.