Thursday, April 3, 2025
- Advertisement -
HomeEntertainmentலியோவே ரிலீஸ் ஆகல, அதுக்குள்ளையும் அடுத்த பட சூட்டிங்கிற்கு தயாரான தளபதி… இந்த குதிரைய பந்தயம்...

லியோவே ரிலீஸ் ஆகல, அதுக்குள்ளையும் அடுத்த பட சூட்டிங்கிற்கு தயாரான தளபதி… இந்த குதிரைய பந்தயம் அடிக்கவே முடியாது என மார்த்தட்டும் விஜய் வெறியர்கள்… ஏ.கே. ஃபேன்ஸுக்கு காது கேட்டுச்சாப்பா…

தளபதி விஜய் தற்போது லியோ படத்திற்கான வேலைகளை முடித்துள்ளார். வரும் 19-ம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. கடைசியாக வெளிவந்த விக்ரமில், எல்சியூ எனும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி ரசிகர்களை கிறுகிறுக்க செய்த லோகேஷ் கனகராஜ், இதில் என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

எல்சியூ கான்செப்டை அவர் விடுவதாக இல்லை என்றும், நிச்சயம் லியோ அந்த வரிசையில்தான் வரும் எனவும் கோலிவுட்டில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது இப்படி இருக்க, பட வெளியீட்டுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் புரோமோஷன் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இசைவெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ஏமாற்றம் மிஞ்சியதால், உடனடியாக அவர்களை சரி செய்வதற்கு படத்திலிருந்து இரண்டாம் பாடலை வெளியிட்டார் தயாரிப்பாளர் லலித் குமார்.

ஆனால், இது விஜய் ரசிகர்களை கூல் செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். அடுத்ததாக டிரெய்லர் எப்போது என்று அவர்கள் ஒட்டுமொத்தமாக கேட்டு வருகின்றனர். அநேகமாக அடுத்த வாரம் லியோ முன்னோட்டம் வெளியாகும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி லியோ ஃபீவர் உக்கிரமாக இருக்க, தளபதி விஜய்யோ சைலண்ட்டாக தனது அடுத்த படத்திற்கான வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இதனை வெங்கட் பிரபு இயக்குவதும், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதும் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். படத்தில் தந்தை – மகன் என இரண்டு வேடங்களில் விஜய்யை நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறாராம். இதில் தந்தை விஜய்க்கு சினேகா ஜோடியாகவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவும் நடிப்பதாக பேசப்படுகிறது. படத்தில் விஜய்யை வித்தியாசமாக காட்ட வெங்கட் பிரபு ஆசைப்பட, விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு மூவரும் கலிபோர்னியா சென்று திரும்பினர். அங்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தில் விஜய்யின் தோற்றத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றதாம்.

- Advertisement -

இந்த நிலையில், தளபதி 68-க்கான படப்பிடிப்பு வரும் 3-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் பாடல் காட்சியுடன் படத்தை ஆரம்பிக்கிறார்களாம். இதற்கு நடன இயக்குநராக செயல்பட போவது பிரபுதேவாவின் அண்ணன் ராஜூ சுந்தரம்தான். இன்னும் லியோ படமே வெளியாக நிலையில், விஜய் அடுத்தப்படத்தில் கவனம் செலுத்துவதை அறிந்து கோலிவுட்டே பாராட்டி வருகிறது. இதற்கு முன்னால், பிகில் படம் வெளியாவதற்கு முன்பே, மாஸ்டர் திரைப்படத்திற்கான வேலையில் தளபதி இறங்கினார். அந்த படம் மெகா ஹிட் அடித்ததால், இதுவும் அதே மாதிரிதான் இருக்கும் என விஜய் விசிறிகள் ஆசையோடு கூறி வருகின்றனர்.

Most Popular