Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 தலைப்பு மாற்றப்பட்டது.. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.. புத்தாண்டுக்கு முன்னரே வெளியாகும் அப்டேட்..‌ !

தளபதி 68 தலைப்பு மாற்றப்பட்டது.. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.. புத்தாண்டுக்கு முன்னரே வெளியாகும் அப்டேட்..‌ !

தளபதி விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், ஜெயராம், கிச்சா சுதீப், ஸ்னேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, யோகி பாபு என ஓர் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

- Advertisement -

வெளிநாட்டு காட்சிகளை முடித்துவிட்டு படக்குழு தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை படத்தின் பூஜை வீடியோ மற்டுமே வெளியானது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற புத்தாண்டுக்கு அறிவிக்கப்படும் என செய்திகள் வந்துள்ளன.

அண்மையில் டிவிட்டரில் தளபதி 68 படத்தின் தலைப்பு ‘ பாஸ் ’ என ஓர் செய்து பரவியது. ரசிகர்களுக்கு இது பெரிதாக பிடிக்கவில்லை. வைரலான செய்தியைக் கண்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் “ பயப்படாதீர்கள்.. தளபதி 68 டைட்டில் நிச்சயம் பாஸ் இல்லை ” என ஓர் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது மற்றொரு தலைப்பு சமூக வலைத்தளத்தில் உலா வந்துக் கொண்டுள்ளது. தளபதி 68 படத்துக்கு ‘ GOAT ’ எனும் தலைப்பு உண்மையாக இருக்கலாம் எனச் சொல்கின்றனர். கோட் என்றால் எல்லா காலத்திலும் சிறந்தது ( G.O.A.T – Greatest of all time ) என அர்த்தம். இந்த வார்த்தை விளையாட்டுகளில் அல்லது ஏதனும் ஒரு துறையில் சிறந்தவராக விளங்குபவரைக் குறிப்பிட பயன்படுத்தப்படும். இந்தத் தலைப்பும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதற்கு பாஸ் எனும் தலைப்பே பரவாயில்லை எனச் சொல்கின்றனர்.

- Advertisement -

தளபதி 68 படம் ‘ லூப்பர் ’ எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் சாயலில் இருக்கும் என தகுந்த வட்டாரங்களில் ஷூட்டிங்க்கு முன்னரே சொன்னர். சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் அமையும் இந்தப் படம் தளபதி கேரியரில் புதிய அனுபவமாக இருக்கப் போகிறது. புத்தாண்டுக்கு முன்னரே டிசம்பர் 28ஆம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை அன்று வரவில்லை எனில் புத்தாண்டு பரிசாக நிச்சயம் வரும்.

Most Popular