Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னது லியோ படத்தில் விஜய்க்கு இரண்டு முகமா… ஒன்னு, எல்லாருக்குமே தெரிஞ்ச கேங்ஸ்டர் வேடம்… இன்னொன்னு...

என்னது லியோ படத்தில் விஜய்க்கு இரண்டு முகமா… ஒன்னு, எல்லாருக்குமே தெரிஞ்ச கேங்ஸ்டர் வேடம்… இன்னொன்னு என்ன தெரியுமா?

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

விரைவில் முடிவடையும் படப்பிடிப்பு

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. இதற்காக ஒட்டுமொத்த பட குழுவினரும் விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் காஷ்மீரில் 100 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பை வீடியோவாக தயாரித்து வெளியிட்டு படக்குழு நிறுவனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், நடிகர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் கூடிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

- Advertisement -

எல்சியு-வில் வருமா லியோ?

லியோ திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே, அந்தத் திரைப்படம் எல் சி யு வில் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கார்த்தியின் கைதி படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், அதில் உள்ள சில முடிச்சுகளை விக்ரம் படத்திலும் தொடர்ந்து வந்தார். குறிப்பாக இறுதி காட்சியில் சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அறிமுகமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜின் இந்த எல் சி யு – யுக்தி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது விஜயின் லியோ திரைப்படமும் எல் சி யு வாகவே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக தினமும் சமூக வலைதளத்தில் ஏதாவது ஒரு பதிவை இடும் அவர்கள், லோகேஷ் கனகராஜன் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

பட்டித் தொட்டி எங்கும் எட்டடித்த நா ரெடி பாடல்

நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி பாடல் வெளியானது. நடிகர் விஜய் இந்த பாடலை பாடியிருக்கிறார். 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் பாடல்களின் வரிகளும் புதுவித அனுபவத்தை தந்துள்ளது.

லியோவில் விஜய்க்கு இரண்டு முகமாம்

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, ஸ்டூடியோவின் ஒரு மணி நேரத்திற்குள் நா ரெடி பாடலை விஜய் பாடியதாக வெளியான தகவலைக் கேட்டு ரசிகர்கள் குஷி அடைந்தனர். இந்த நிலையில் லியோ படத்தில் இருந்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது படத்தில் விஜய்க்கு இரண்டு முகமாம். படத்தில் அப்பாவி குடும்ப தலைவராகவும், அதிரடி ஆக்சன் கேங்ஸ்டர் ஆகவும் விஜய் நடித்துள்ளாராம். இந்தத் தகவலால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், படத்தை காண ரெடியாகி வருகின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Most Popular