Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentநீங்க அடிச்சா சிக்ஸு.. நாங்க அடிச்சா ஃபோரா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையுடன் கிரிக்கெட் ஆடிய தளபதி...

நீங்க அடிச்சா சிக்ஸு.. நாங்க அடிச்சா ஃபோரா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையுடன் கிரிக்கெட் ஆடிய தளபதி விஜய்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”வாரிசு”. விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சங்கீதா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட ஏராளமான நடித்திருந்தனர். கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

இருப்பினும் நடிகர் விஜய் நடித்த படம் என்பதால், வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரூ.300 கோடி வசூல் ஈட்டிய திரைப்படம் என்பதால், படக்குழு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் போது விஜய், ராஷ்மிகா, ஷ்யாம், இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடியதாக நடிகர் ஷ்யாம் சில பேட்டிகளில் கூறியிருந்தார்.

ஏற்கனவே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு ஒருமுறை ரத்து செய்யப்பட்ட போது இயக்குநர் குழுவினருடன் இணைந்து நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடி இருந்தார். அதேபோல் அட்லீ இயக்கிய மெர்சல் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகின.

- Advertisement -

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி ஓராண்டை எட்டியுள்ள நிலையில், படக்குழு தரப்பில் விஜய் உள்ளிட்டோர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ”ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு முன் விஜய் – ராஷ்மிகா இருவரும் காதல் காட்சியில் நடித்திருபபர்கள். அந்த காட்சியில் உள்ள ஆடைகளை அணிந்து விஜய் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

- Advertisement -

அப்போது படப்பிடிப்பில் ஒருவரை பார்த்து, நீ அடிச்சா சிக்ஸு.. நாங்க அடிச்சா ஃபோர்ரா” என்று சொல்லும் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா அம்பயராக நிற்க, உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடியுள்ளார். படப்பிடிப்பின் போது கிடைக்கும் நேரங்களில் விஜய் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular