Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentசூப்பர் ஸ்டார்-னு பேர் வச்சாலே இப்படித்தான்.. மன்னிப்பு கேட்ருவாங்க.. மெர்சல் சர்ச்சையின் போது தளபதி கொடுத்த...

சூப்பர் ஸ்டார்-னு பேர் வச்சாலே இப்படித்தான்.. மன்னிப்பு கேட்ருவாங்க.. மெர்சல் சர்ச்சையின் போது தளபதி கொடுத்த மாஸ் அறிக்கை வைரல்!

நயன்தாரா நடிப்பில் வெளியான ”அன்னப்பூரனி” படத்தில் ராமன், சீதை மற்றும் லக்‌ஷ்மண் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மாமிசம் உண்டார் என்று வால்மீகி எழுதிய ராமாயணத்தில் எழுதப்பட்டதாக நடிகர் ஜெய் கூறுவார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகி, சில வாரங்களுக்கு முன் ஓடிடி-யில் ரிலீஸாகியது. அப்போது இந்த வசனம் வடமாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்துகளின் நம்பிக்கையை புண்படுத்தியதாக மும்பையில் இந்து சங்கங்கள் சார்பாக புகாரளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நயன்தாரா, ஜெய், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதன்பின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டதோடு, நெட்ஃபிளிக்ஸ்-ல் இருந்து படத்தை நீக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஜெய் ஸ்ரீ ராம் என்று தலைப்பிட்டு அன்னப்பூரனி சர்ச்சைக்காக மன்னிப்பு கோருவதாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார்னு பேர் வைத்தால் இப்படித்தான் சாதாரணமாக மன்னிப்பு கேட்டுவிடுவார்கள் என்று விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இதனிடையே மெர்சல் படத்தின் போது தளபதி விஜய், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு பற்றி பேசிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் திரையரங்குகளை முற்றுகையிட்டும், விஜய் போஸ்டரை கிழித்தும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேபோல் நடிகர் விஜய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கோயில் கட்டக் கூடாது என்று வசனம் பேசியதாக லாஜிக் இல்லாமல் விமர்சனங்கள் வந்தது.

- Advertisement -

அப்போது நடிகர் விஜய் தரப்பில், ஜீசஸ் சேவ்ஸ்.. சி.ஜோசப் விஜய் என்று பெயரில் அறிக்கையை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் மெர்சல் வெற்றிக்கு காரணமாக தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூடுதல் நக்கலோடு அறிக்கையை வெளியிட்டார். தற்போது இந்த அறிக்கை ட்ரெண்டாகி வருகிறது.

Most Popular