Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentதனி ஒருவன் படத்தின் வசூல் தெரியுமா? இதுக்கு மேல உங்களுக்கு என்ன மாஸ் வேண்டும்.. கோபத்தில்...

தனி ஒருவன் படத்தின் வசூல் தெரியுமா? இதுக்கு மேல உங்களுக்கு என்ன மாஸ் வேண்டும்.. கோபத்தில் ஜெயம் ரவி

அண்மையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் சைரன். அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தந்தை – மகளுக்கு இடையிலான பாசம், ரிவெஜ் மற்றும் த்ரில்லர் பாணியில் திரைக்கதையாக உருவாகியுள்ள சைரன் திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் விளம்பர பணிகளில் ஜெயம் ரவி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவியிடம் பான் இந்திரா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பொன்னியின் செல்வம் படத்திற்கு முன்பாக என்னை அனைத்து மாநிலங்களுக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது தனி ஒருவன் தான். தமிழில் மட்டுமே அந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்தோம்.

டப்பிங் செய்து எந்த மொழியிலும் வெளியிடவில்லை. அதில் அதிக கவனமாக இருந்தோம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர பணிகளுக்காக பெங்களூரு, ஐதராபாத், கேரளா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற போது, அனைவரும் கேட்டது தனி ஒருவன் படம் பற்றிய கேள்விகள் தான். அவர்களிடம் நான் மறுகேள்வியாக, எந்த மொழியில் அந்த படத்தை பார்த்தீர்கள் என்று கேட்டேன்.

- Advertisement -

அதற்கு, தமிழில் தான் நாங்கள் தனி ஒருவன் படத்தை பார்த்தோம் என்று கூறினார்கள். கொஞ்சம் ஆச்சியம் தான். அதேபோல் எனது படங்களில் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்று கூறி வருகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. அதிகாரப்பூர்வமாக எனது படங்களின் வசூல் வெளிவருவதில்லை. தமிழ் மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட தனி ஒருவன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.90 கோடி வசூலித்தது.

- Advertisement -

8 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.100 கோடி அளவிற்கு எனது படங்கள் வசூல் செய்துள்ளன. இதற்கு மேல் எனக்கு என்ன மாஸ் தேவை என்று தெரியவில்லை. பான் இந்தியா என்பது ரிலீஸில் இல்லை. ரசிகர்களின் கொண்டாட்டம் தான் பான் இந்தியா வெற்றி என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். தனி ஒருவன் 2 படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லனுக்கான தேடலில் இயக்குநர் மோகன் ராஜா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular