Friday, May 17, 2024
- Advertisement -
HomeEntertainmentஅயலான் முன்னாடி கேப்டன் மில்லர்-லாம் நிக்காது.. இது அயலான் பொங்கல் தான்.. ஆடியோ லான்சில் அடித்து...

அயலான் முன்னாடி கேப்டன் மில்லர்-லாம் நிக்காது.. இது அயலான் பொங்கல் தான்.. ஆடியோ லான்சில் அடித்து சொன்ன அயலான் தயாரிப்பாளர்!

”இன்று நேற்று நாளை” படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் யோகி பாபு, கருணாகரன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சில காரணங்களால் ஏலியன் ஒன்று சென்னையில் உள்ள சிவகார்த்திகேயனுடன் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறது.

- Advertisement -

இதன்பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியன் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதை இந்தியில் வெளியான ”கோல் மில் கயா” படத்தின் ஒன் லைனை போல் இருந்தாலும், அயலான் வித்தியாசமான திரைக்கதை மூலம் ஈர்க்கும் என்று படக்குழு சொல்லி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பை முடிக்க முடியாமல் அயலான் படக்குழு தடுமாறி வந்தது.

பட்ஜெட் அதிகமாகியதால் தயாரிப்பாளர் விலகிய நிலையில், புதிதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் பாண்டன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களாக இணைந்தனர். இந்த நிலையில் அயலான் படத்தின் இசை வெளியீட்டு சென்னை உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

- Advertisement -

இந்த விழாவில் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் பேசும் போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு எத்தனை படங்கள் வெளி வந்தாலும், இது அயலானின் பொங்கலாக தான் இருக்கும் என்பது நிச்சயம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் வெறுப்பாளர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். இந்த படம் வெளியான பின் சிவகார்த்திகேயனை வெறுப்பதற்கு உங்களுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த படம் வெளியான பின் எந்த கடனும் சிவகார்த்திகேயனுக்கு இருக்காது. ஏனென்றால் தெலுங்கு சினிமாவுக்கு எப்படி பாகுபலி அமைந்ததோ, அதுபோல் தமிழ் சினிமாவுக்கு அயலான் இருக்கும்.

அயலான் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும். இந்த படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் அனைத்தும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொங்கலுக்கு கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் படம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular