சினிமா

“ வலிமை விமர்சனங்களுக்குப் பின் துணிவு படத்தைக் கைவிடலாம்னு இருந்தன் ! அஜித் சார் தான் ஆறுதல் சொன்னார் ! ” – இயக்குனர் வினோத் வெளிப்படைப் பேச்சு

Ajithkumar and H Vinoth

ஹெச்.வினோத் – அஜித் கூட்டணியில் வெளியாகவிருக்கும் மூன்றாவது திரைப்படம் துணிவு. முந்தைய 2 படங்களை தயாரித்த போனி கபூரே இப்படத்திற்கும் செலவு செய்கிறார். படம் வருகின்ற பொங்கலுக்கு தளபதி விஜய்யின் வாரிசு படத்துடன் மோதுகிறது.

சதுரங்க வேட்டை மற்றும் தீரன் எனும் இரு தரமான படங்களைத் தந்து பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அவரின் 3வது படமே அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருடன். ரீமேக் படம் என்றாலும் தன் எழுத்துக்களால் கைத் தட்டல்களை அள்ளிச் சென்றார்.

நேர்கொண்டப் பார்வைக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் தன் சொந்தக் கதையுடன் பணி புரிவதாக வெளியான செய்தியால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அது தான் வலிமை. உண்மையில் அவரின் முந்தையப் படங்களைப் போல இது அமையவில்லை. விமர்சன ரீதியாக சற்று அடி வாங்கியது. இது குறித்து குமுதம் நேர்காணலில் இயக்குனர் வினோத் பேசினார். சவாலான கேள்விகள் சில அவரின் முன் வைக்கப்பட்டது.

வலிமை தோல்விப் படம் என ஒப்புக்கொள்கிறீர்களா ?

இதற்கு இயக்குனர் ஹெச்.வினோத், “ நெருக்கடியால் சிதைந்துப் போகிற இந்த தலைமுறையின் அக்கறைக்காக நான் இந்தப் படத்தை எடுத்தேன். தலைவலி இல்லாதவர்களுக்கு என் தைலம் பிடிக்கவில்லை. ஓர் இயக்குனராக விமர்சனங்களை ஏற்பது என் கடமை. உண்மையான நியாயமான சில விமர்சனங்களைக் கேட்டேன். குறைகளைத் திருத்திக் கொள்வேன். சில விமர்சனங்கள் வன்மத்துடன் அரிவாளைக் கொண்டு வெட்டுவது போல் இருந்தது. அவற்றைக் கண்டுகாமல் சென்று விட்டேன். ” என்றார்.

மேலும், “ வலிமை வெளியான போது மிக்ஸ்ட் விமர்சனங்கள் தான் வந்தது. அதை நான் மறுக்கவில்லை. இருப்பினும் படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடித் தீர்த்தனர். கலெக்ஷனில் வலிமை எவ்வளவு லாபம் திரட்டியது என அனைவருக்கும் தெரியும். என்னை நம்பி பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் மற்றும் இதில் பணியாற்றியவர்களுக்கு வலிமை வெற்றித் திரைப்படம் தான். ” எனப் பேசினார்.

வலிமை விமர்சனங்களை அஜித் எப்படி எடுத்துக் கொண்டார் ?

“ அஜித் சார் பொதுவாக இதையெல்லாம் கண்டுக்க மாட்டார். வெற்றி தோல்வியை மதிக்கிற ஆள் கிடையாது. ஒருவேளை வலிமை ஒடாமால் போயிருந்தால் கூட அவர் என்னுடன் அடுத்தப் படம் பண்ணியிருப்பார். சில விமர்சனங்களைப் பார்க்கையில் அடுத்தப் படத்தைக் கைவிடலாம் என்றெல்லாம் முடிவெடுத்து விட்டேன். பல வருடங்கள் அவர் உழைத்து சென்ற உயரத்துக்கு என்னால் எந்த வித பங்கமும் வந்துவிடக் கூடாது என நினைத்தேன்.

வலிமைக்குப் பிறகு அஜித் சாரை விட்டு விலகிவிடமால் என எண்ணினேன் ஆனால் அஜித் சார் என்னிடம் வந்து, “ இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்து மக்களோட ரெஸ்பான்ஸ் பாருங்கனு சொன்னாரு. அவர் சொன்னது போல் தான் நடந்து. ” என்றார்.

துணிவு படம் அயோக்கியர்களின் ஆட்டமாக இருக்கும் என இயக்குனர் வினோத் ஏற்கனவே கூறிவிட்டார். பணம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் எல்லோரும் பணத்தை சம்பாதிக்க கஷ்டப்படுகிறார்கள். மேலும், துணிவு முழுக்க முழுக்க பனத்தைப் பற்றியக் கதை ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top