Thursday, March 28, 2024
- Advertisement -
HomeEntertainment’லியோ’ பட லுக் இதுதானோ? காதலர் தினத்தை காஷ்மீரில் கொண்டாடிய த்ரிஷா.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்!

’லியோ’ பட லுக் இதுதானோ? காதலர் தினத்தை காஷ்மீரில் கொண்டாடிய த்ரிஷா.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது. குடும்ப செண்ட்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தச் சூழலில் வாரிசு படத்துக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். விஜய் – லோகேஷ் இணைந்த மாஸ்டர் படம் பெரும் ஹிட்டடித்ததாலும், லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனதாலும் இந்தப் படம் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இருவரும் இணையும் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கவிருக்கிறது. படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதனையடுத்து விக்ரம் படம் போலவே இந்தப் படத்துக்கும் ப்ரோமோ ஒன்று ஷூட் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்துக்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்காக விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் இரு வாரங்களுக்கு தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரென த்ரிஷா விமானத்தில் இருந்தவாறு காஷ்மீரின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து லியோ படத்திலிருந்து த்ரிஷா விலகி சென்னை திரும்பிவிட்டார் என செய்திகள் பரவின. ஆனால் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகவில்லை என்பது அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் லியோ படப்பிடிப்பில் த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மாடர்ன் உடையில் த்ரிஷா வழக்கம் போல் இருப்பதால், இதுதான் லியோ படத்தின் த்ரிஷாவின் லுக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், காதலர் தினத்திற்காக இவ்வாறு உடை அணிந்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Most Popular