Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாஇவர் நல்ல பாடகர்ங்க..! போட்டி போட்டு பாடிய வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான்!

இவர் நல்ல பாடகர்ங்க..! போட்டி போட்டு பாடிய வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ ஆர் ரகுமான் வடிவேலு ஆகியோர் மேடையில் போட்டி போட்டு பாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் வடிவேலு கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடியிருக்கிறார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement -

இதில் வடிவேலுவும் ஏ ஆர் ரஹ்மானும் மேடையில் போட்டி போட்டு பாடினார். வடிவேலுவை மேடைக்கு அழைத்த ஏ ஆர் ரஹ்மான். இவர் ஒரு நல்ல பாடகர் ஹைப்பீச் பாடல்களை எல்லாம் சிறப்பாக பாடுவார்.

இப்போது அவருடைய பாட்டை கேளுங்கள் என்று ஊருக்காக ஆலும் கலைஞன் தன்னை மறப்பான் என்ற வரியை ஏ ஆர் ரஹ்மான் பாட அதனை மீண்டும் வடிவேலும் ஹைபிச்சில் பாடினார். இதனைத் தொடர்ந்து அடுத்த வரியை ஏ ஆர் ரகுமான் பாட இதனையும் வடிவேலும் தன்னுடைய ஸ்டைலில் பாடி அசத்தினார்.

வடிவேலு செய்த மாற்றத்தை அடுத்து ரஹ்மானும் அதே பாடலை வேற ஸ்டைலில் பாட அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவேலுவும் பாடினார். அப்போது வடிவேலுவை ஏ ஆர் ரஹ்மான் வெகுவாக பாராட்ட வடிவேலு இதற்கு தான் என்ன சொல்வது என்று தெரியாமல் நன்றி தெரிவித்து கொண்டார்.

வடிவேலுவின் திறமையை நாம் இந்த படத்தில் முழுசாக பார்க்கப் போகிறோம் என்பதற்கு ஒரு டீசர் ஆகத்தான் இந்த காட்சி அமைந்திருக்கிறது. இரண்டு ஜாம்பவான்களும் மேடையில் பாடி அசத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular