Wednesday, May 15, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னது தளபதி 68 படத்தில் விஜய் உடன் அடிக்கப் போவது இந்த நடிகரா… அப்போ ஸ்கிரீன்...

என்னது தளபதி 68 படத்தில் விஜய் உடன் அடிக்கப் போவது இந்த நடிகரா… அப்போ ஸ்கிரீன் கிழியப்போகுது உறுதிதான் போங்க…

மாஸ்டர், வாரிசு திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதில், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி உள்ளிட்டோ நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

- Advertisement -

இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பேட்ச் ஒர்க் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லியோ திரைப்படத்திலிருந்து, நா ரெடி தான் பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதன் பிறகு சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் பிறந்த நாளன்று அவர்களின் கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டது.

இதில் அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வீடியோவில் அர்ஜுனுக்கென போடப்பட்ட பிஜிஎம்ஐ கேட்டு ரசிகர்கள் சிலாகித்தனர். அனிருத் வேற லெவலில் சம்பவம் செய்திருப்பதாக இணையத்தில் பதிவிட்ட ரசிகர்கள், அந்த பிஜிஎம்மையே ரிங் டோன் ஆக மாற்றி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அடுத்த மாத இறுதியில் லியோ படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், அதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

- Advertisement -

லியோ படம் ரிலீஸ் ஆனதும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தளபதி விஜய். முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகும் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு விஜயுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்து இருப்பதால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க தளபதி 68-ல் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், பிரியங்கா மோகனும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாகவும், விஜய்க்கு தம்பியாக ஜெய் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு இதில் திணிக்க முயற்சி செய்து வருகிறாராம்.

சமீபத்தில் இந்த திரைப்படம் குறித்து பேசி இருந்த வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன், எனது மகன் தளபதி 68 கதையை கூறிய போது நெகிழ்ந்து விட்டேன் என்றும், இதில் இடம்பெறப்போகும் கதாபாத்திரங்களை இப்போது கூறினால் சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்றும் பேசி இருந்தார். படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் அரசல் புரசலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், தளபதி 68 பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி இருப்பதால், முக்கிய நடிகர்களை களம் இறக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். இதற்கு விஜய்யும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அஜித்தை கேமியோ ரோலில் நடிக்க வைக்க தான் வெங்கட் பிரபு திட்டம் இருப்பதாகவும் தகவல் கசிகின்றன. இதனால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ள நிலையில், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Most Popular