Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஅமீர் இல்லாமல் ”வாடிவாசல்” வராது.. அழுத்தம் திருத்தமாக சொன்ன வெற்றிமாறன்

அமீர் இல்லாமல் ”வாடிவாசல்” வராது.. அழுத்தம் திருத்தமாக சொன்ன வெற்றிமாறன்

சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை 2ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் ஏராளமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பின் இயக்குநர் வெற்றி மாறன் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

- Advertisement -

இதற்கான டெஸ்ட் ஷூட் ஏற்கனவே கடந்தாண்டு நடைபெற்ற நிலையில், சூர்யாவுக்கு 2 காளைகள் வாங்கப்பட்டு அதனை அவர் வளர்த்து வருகிறார். அதேபோல் வாடிவாசல் படத்திற்கு தேவையான விஎஃப்எக்ஸ் காட்சிகள் லண்டனில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சனை முற்றி வருகிறது.

இதனால் வாடிவாசல் படத்தில் சூர்யா – அமீர் எப்படி இணைந்து பணியாற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அமீர் கூறும் போது சூர்யாவுக்கும் எனக்கும் இடையிலான அன்பு சகோதரர்களுக்கு இடையிலான அன்பாகும். நாங்கள் இருவரும் நந்தா படத்தில் இருந்த போது எவ்வளவு அன்புடன் இருந்தோமோ, அதேபோல் தான் இப்போதும் சகோதரனாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் சூர்யா எதிர்ப்பு தெரிவித்தால் வெற்றி மாறன் யார் பக்கம் இருப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறன் வாடிவாசல் படம் குறித்து ஆலோசிக்க இயக்குநர் அமீரை சந்தித்துள்ளார். வாடிவாசல் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் வெற்றி மாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், வாடிவாசல் படத்திற்கான கதை எழுதும் போது அமீரின் கதாபாத்திரம் வளர்ந்து கொண்டே போகிறது. அதனால் அவர் வாடிவாசல் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Most Popular