அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பிரம்மாண்ட ஹிட்டடித்தது. ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த லியோ திரைப்படம், விஜய் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. பான் இந்தியா லெவனில் இல்லையென்றாலும், தென்னிந்திய மாநிலங்களில் விஜய்-க்கு அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு நடித்து வருகிறார். இதில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதேபோல் புதிய கீதை படத்திற்கு பின் மீண்டும் நடிகர் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனியாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரிடம் மீண்டும் விஜய் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் குமார், நான் விஜய் சாருடன் மீண்டும் இணைய 2 முறை வாய்ப்பு வந்து கடைசி நேரத்தில் தவறியது.
விஜய் நடிப்பில் வெற்றிமாறன் இயக்க வேண்டிய படத்திற்கு நான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதேபோல் இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் விஜய்-க்கு கதை ஒன்றை கூறியிருந்தார். அந்த படம் நடந்திருந்தால் நான்தான் இசைமைத்திருப்பேன். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. இதனால் தான் விஜய் சாருடன் மீண்டும் இணைய முடியவில்லை.
ஆனால் நானும் அவரும் சகோதரர்களை போல் தான் இருக்கிறோம். நான் தேசிய விருது வென்ற போது உடனடியாக எனக்கு செல்ஃபோன் மூலமாக அழைத்து வாழ்த்து கூறினார். என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் இயக்குநர்கள் விஜய் சாருடன் இணையும் போது நான் அவருடம் மீண்டும் இணைவேன் என்று தெரிவித்துள்ளார்.