Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentசத்தம் இல்லாமல் வேலை காட்டும் வெற்றிமாறன்… லண்டனில் நடந்து வரும் தரமான சம்பவம்… வாடிவாசலுக்கான சூடான...

சத்தம் இல்லாமல் வேலை காட்டும் வெற்றிமாறன்… லண்டனில் நடந்து வரும் தரமான சம்பவம்… வாடிவாசலுக்கான சூடான அப்டேட் இதோ

நடிகர் தனுஷ், பிரியாமணி நடிப்பில் வெளியான அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் பாலு மகேந்திரா. அந்த சமயத்தில், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெற்றி மாறன், தனுஷிடம் கதை கூற, பின்னாளில் வெளியானது பொல்லாதவன் திரைப்படம். பைக் திருட்டை மையமாக வைத்தும், அதன் பின்னால் இருக்கும் ரவுசத்தையும் மிக நேர்த்தியாக எடுத்து முதல் படத்திலேயே சபாஷ் போட வைத்தார் இயக்குநர் வெற்றிமாறன்.

- Advertisement -

இதன்பிறகு மதுரையில் கதைகளத்தை அமைத்த அவர், தனுஷுடன் கைகோர்த்து ஆடுகளத்தை எடுத்தார். எதிர்பார்த்ததை விட மிகப்பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், இயக்குநர் வெற்றி மாறனுக்கும், நடிகர் தனுஷிற்கும் தேசிய விருதை கிடைக்கச் செய்தது. பின்னர், விசாரணை, வடசென்னை படங்களை இயக்கிய வெற்றிமாறன், அசுரன் திரைப்படத்தின்மூலம் மீண்டும் தேசிய விருதை பெற்றார். இதேபோல், நடிகர் தனுஷும் தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் தேசிய விருதை அள்ளினார்.

இதையடுத்து வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைவதாகவும், இந்த படத்திற்கு வாடிவாசல் என்றும் பெயரிப்பட்டது. அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுவே இந்த படத்தை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆடுகளத்தை சேவல் சண்டையை மிக நுட்பமாக காட்டியிருந்த வெற்றிமாறன், ஜல்லிக்கட்டிற்கு இந்தமுறை களம் காண இருப்பதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இதற்கான போஸ்டரும் வெளியான நிலையில், காளைகளுடன் பயிற்சியிலும் ஈடுபட்டார் சூர்யா. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூரியும், சூர்யாவுடன் ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கினார். இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சூர்யா ரசிகர்கள் சென்றனர்.

- Advertisement -
Vetrimaaran about Vaadivasal and Vadachennai 2

இருவரும் உடனடியாக சூட்டிங் போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விடுதலை படத்தை இயக்கச் சென்றார் வெற்றிமாறன். இந்த பக்கம் கங்குவா படத்திற்கான பணியில் இறங்கினார் சூர்யா. இதனால் வாடிவாசல் படத்திற்கான பேச்சே எழாமல் இருந்தது. இந்த படம் நிறைவடைந்தபிறகு இருவரும் இணைவார்கள் என பேச்சு எழுந்த நிலையில், மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிக்கபோவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றி மாறனும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையில் இறங்கினார். இதனால் வாடிவாசல் கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தன.

- Advertisement -

இந்தநிலையில்தான் வாடிவாசல் படம் குறித்த சூடான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படம் தொடர்பான அனிமட்ரானிக்ஸ் பணிகள் தற்போது லண்டனில் சுடச்சுட நடைபெற்று வருகிறதாம். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணியில் வெற்றிமாறன் பிஸியாக இருந்தாலும், மாதந்தோறும் லண்டன் சென்று வாடிவாசலுக்கான வேலையை கண்காணித்து வருகிறாராம். இதனால் அடுத்த ஆண்டு இருவரும் இணைவது உறுதி என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Most Popular