Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் திடீர் மரணம்..அசர்பைஜானில் அதிர்ச்சியில் ஆழ்ந்த படக்குழு.. மாரடைப்பால் உயிர்பிரிந்த சோகம்!

விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் திடீர் மரணம்..அசர்பைஜானில் அதிர்ச்சியில் ஆழ்ந்த படக்குழு.. மாரடைப்பால் உயிர்பிரிந்த சோகம்!

துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் ஜோடியாக நடிகைகள் த்ரிஷா மற்றும் ரெஜினா இருவரும் நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அஜித் குமாருக்கு வில்லனாக இளம் நடிகர் ஆரவ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் ஆரவ் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் அசர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், நடிகை த்ரிஷா அசர்பைஜானில் இருப்பது அவரது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் கலை இயக்குநராக மிலன் பணியாற்றி வந்தார். அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய பில்லா, வீரம், வேதாளம், விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சாபு சிரிலின் உதவியானரான மிலன், சிட்டிசன் படத்தில் இருந்தே அஜித் குமாருடன் நல்ல பழக்கத்தில் இருந்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்காக கலை இயக்குநர் மிலன் அசர்பைஜானில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே மாலையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மிலனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உதவியாளர்கள் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ஆனால் போகும் வழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது. படப்பிடிப்பு சென்ற இடத்தில் மிலன் உயிரிழந்திருப்பது படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மிலனின் உடலை சென்னைக்கு கொண்டு வர லைகா நிறுவனம் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Most Popular