Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடுதலை 2ம் பாகம் ரெடி.. திரைப்பட விழாவில் ஒரே படமாக வெளியிட வெற்றிமாறன் முடிவு.. இங்கே...

விடுதலை 2ம் பாகம் ரெடி.. திரைப்பட விழாவில் ஒரே படமாக வெளியிட வெற்றிமாறன் முடிவு.. இங்கே எப்போ ரிலீஸ் தெரியுமா?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை முதல் பாகம். சுமார் ரூ.65 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் விடுதலை படத்தின் 2ம் பாகமும் படமாக்கப்பட்டு வந்தது.

- Advertisement -

முதல் பாகத்தில் சூரி – பவானியின் காதல் கதை, வாத்தியாரின் போராட்டங்கள் மற்றும் காவல்துறை அத்துமீறல் என்று ஏராளமான போராட்டங்களை ஒரே கதையில் பிணைத்து வெற்றிமாறன் படமாக்கி இருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், மனித உரிமை மீறல் குறித்து விவாதத்தையும் தொடங்கி வைத்தது.

தற்போது விடுதலை படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதை கூடுதலாக எழுதப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவியாக மஞ்சு வாரியர் மற்றும் நண்பனாக அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் கதையாக விஜய் சேதுபதியை என்கவுன்ட்டர் செய்ய காட்டிற்குள் போலீஸ் அழைத்து செல்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை 2ம் பாகத்தை ரோட்டர்டம் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிட அனுப்பி வைத்துள்ளார். திரைப்பட விழாவிற்கு என்று தனியாக ஒரு வெர்ஷனும், திரையரங்குகளுக்கு என்று பிரத்யேக வெர்ஷனும் படமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் இரு பாகத்தையும் இணைத்து ஒன்றாக திரையிடவுள்ளார். அதற்கான படத்தொகுப்பு பணிகளில் தான் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

இன்னும் விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு 8 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் சூழலில், மே மாதத்திற்குள் படத்தை திரைக்கு கொண்டு வர தயாரிப்பு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் இயக்குநர் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் பணிகளை தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளையும் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார்.

Most Popular