Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஅஜித் போனால் என்ன… நான் இருக்கிறேன் என்று விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்த கமல்ஹாசன்… லவ்...

அஜித் போனால் என்ன… நான் இருக்கிறேன் என்று விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்த கமல்ஹாசன்… லவ் டுடே பிரதீப் தான் ஹீரோவாம்… போடு தகிட தகிட…

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற, அடுத்ததாக நானும் ரவுடிதான் திரைப்படத்தை எடுத்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்த திரைப்படத்தில், நயன்தாரா காதம்பரி என்னும் ரோலிங் நடித்து கலக்கினார். யாரடி நீ மோகினி, பில்லா திரைப்படங்களின் வரிசையில் நானும் ரவுடிதான் நயன்தாராவிற்கு பேர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

- Advertisement -

படம் முழுக்க நகைச்சுவை மற்றும் காதலை கலந்து அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்த நானும் ரவுடிதான், திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்றது. இது திரைப்படத்தின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவித்தனர். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதன்பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த அவர், சமந்தா மற்றும் நயன்தாராவை ஹீரோயின்களாக்கி காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கினார். கலவையான விமர்சனத்தை இது பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. இத நடுவே விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது.

- Advertisement -

இந்நிலையில், துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாய் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே, அஜித் படத்தில் இருந்து விலகுவதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு படத்தை அறிவித்துவிட்டு பின்னர் அதிலிருந்து விலகுவது எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்று பலரும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

- Advertisement -

அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் கிடைத்திருக்கிறது. லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன் உடன்தான், விக்னேஷ் சிவன் இணைகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பாக, வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு, தனது டேட்ஸ்-ஐ கொடுப்பது போல பேரிச்சம் பழங்களை பிரதீப் கொடுக்கிறார். கலகலப்பூட்டும் இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Most Popular