சினிமா

வாரிசு படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா ? விஜய்யின் ரோலும் இது தான்

Vijay Vaarisu

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது அவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால், படம் 120 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் வசூல் செய்தாலும் மாஸ்டர் ரெக்கார்டை உடைக்க தவறியது.

பீஸ்ட் படத்தில் சில காட்சிகள் இணையதளத்தில் கேலி பொருளாக மாறியது. இதனால் நடிகர் விஜய் தனது அடுத்த திரைப்படத்தை சரியாக தர வேண்டும் என முடிவெடுத்து நடித்து வருகிறார். இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக இணைந்துள்ள நடிகர் விஜய், தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளிலும் மார்க்கெட்டை பெருசாகும் வகையில் வாரிசு திரைப்படத்தை நடித்து வருகிறார்.

Advertisement

வாரிசு திரைப்படத்தில் தந்தையை கொன்று சொத்தை அபகரித்த வில்லனிடம் இருந்து மீண்டும் சொத்தை மீட்டு வில்லனை பழி வாங்குவது தான் கதை என்று தகவல் வெளியாகிறது .மேலும் இதில் நடிகர் விஜய் தனது தந்தையின் அறியப்படாத மகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜயின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் விஜய் அப்ளிகேஷன் டிசைனராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் பெயர் அண்மை காலங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மாஸ்டரில் ஜே.டி , பீஸ்டில் வீரராகவன் போன்ற கதாபாத்திரங்களை தொடர்ந்து தற்போது விஜய் ராஜேந்திரன் என்ற பெயரும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். பிரபு சரத்குமார் பிரகாஷ் ராஜ் சியாம் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது வாரிசு திரைப்படம் குடும்ப கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது இந்த படத்தின் இசை தமன் அமைத்து வருகிறார் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top