Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentபோடு… ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி போச்சாம்… தளபதிக்கு செம ரோல்...

போடு… ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி போச்சாம்… தளபதிக்கு செம ரோல் கொடுத்த அட்லி

தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களைக் கொடுத்து, அதை வெற்றியாக மாற்றும் சூட்சமம் தெரிந்த இயக்குனர்களில் ஒருவர் அட்லி. ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர், நண்பன் திரைப்படத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதன்பிறகு ராஜா ராணி என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற அட்லி, குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவரானார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து, தளபதி விஜயுடன் கைகோர்த்த அவர் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்தார். விஜயுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ததால் புகழின் உச்சிக்கு சென்றார் அட்லி. அதே சமயம், அவரை சுற்றி சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணமே இருந்தது. மௌன ராகம் கதையை உல்டா செய்தே, ராஜா ராணி படத்தை அவர் எடுத்ததாக ஆரம்பத்தில் பலரும் கூறினர்.

இதன் பிறகு தெறி திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற அது விஜயகாந்தின் சத்ரியன் திரைப்படத்தை ஒத்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத இயக்குனர், அடுத்ததாக மெர்சல் திரைப்படத்தை எடுத்தார். ஆனால் இதுவும் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தை ஞாபகப்படுத்துவதாக பலரும் கூறினர். ஒரு திரைப்படத்தை அப்படியே அட்லி காப்பி செய்கிறார் என்றும் இங்கு சிலர் கூறி வந்தனர்.

- Advertisement -

இந்த சூழலில், பிகில் திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றார் அட்லி. இந்தி திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானை வைத்து அவர் படம் இயக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், நயன்தாரா நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஜவான் படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, தளபதி விஜய் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறாராம். அவர் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், தங்கள் தளபதியை பாலிவுட்டில் காண ஆவலாக இருப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Most Popular