விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. இதற்காக ஒட்டுமொத்த பட குழுவினரும் விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் காஷ்மீரில் 100 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பை வீடியோவாக தயாரித்து வெளியிட்டு படக்குழு நிறுவனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில், நடிகர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் கூடிய காட்சி இணையத்தில் வைரலானது.
எல் சி யு வில் வருமா லியோ?
லியோ திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே, அந்தத் திரைப்படம் எல் சி யு வில் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கார்த்தியின் கைதி படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், அதில் உள்ள சில முடிச்சுகளை விக்ரம் படத்திலும் தொடர்ந்து வந்தார். குறிப்பாக இறுதி காட்சியில் சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அறிமுகமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜின் இந்த எல் சி யு – யுக்தி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது விஜயின் லியோ திரைப்படமும் எல் சி யு வாகவே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக தினமும் சமூக வலைதளத்தில் ஏதாவது ஒரு பதிவை இடும் அவர்கள், லோகேஷ் கனகராஜின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.
பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்த நா ரெடி பாடல்
நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி பாடல் வெளியானது. நடிகர் விஜய் இந்த பாடலை பாடியிருக்கிறார். 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் பாடல்களின் வரிகளும் புதுவித அனுபவத்தை தந்துள்ளது.
செப்டம்பரில் இசை வெளியீடு
இதனிடையே லியோ படத்தின் வேலைகளை இறுதி கட்டத்தை ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் சமீபத்தில் டப்பிங் பணியை முடித்து இருப்பதாகவும், படத்தில் காண வி எப் எக்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக லியோ படத்தில் அனைத்து வேலைகளையும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். மேலும், சுப்ர மாதம் இறுதியில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.