Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாசூப்பர் குட் பிலிம்சை கழற்றி விட்ட விஜய்.. அதிர்ச்சியில் ஜீவா

சூப்பர் குட் பிலிம்சை கழற்றி விட்ட விஜய்.. அதிர்ச்சியில் ஜீவா

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் விஜய் எப்போதுமே ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு விடுவார்.

- Advertisement -

இயக்குனர் யார்?  தயாரிப்பாளர் யார் என்று அனைத்து அறிவிப்பும் முன்கூட்டியே வெளியே வந்துவிடும். இந்த நிலையில் தளபதி 62 திரைப்படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

முதலில் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்குவதாக கூறப்பட்டது. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் இயக்க விஜய் இடம் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த படத்தை சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சூப்பர் குட் பிலிம்ஸ் தங்களுடைய நூறாவது திரைப்படத்தை விஜயை வைத்து பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்திருந்தனர். இதற்காக கோபிசந்திடம் ஒப்பந்தமெல்லாம் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது விஜய் ஒரு டிவிஷ்ட வைத்துள்ளார். சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் கோபிசந்த் படத்தை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நடிகர் விஜய் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.  அந்தப் படம் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளாராம்.

மேலும் கோபிசண்ட் படத்தை 69 அல்லது 70 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபிசந்த் படம் கைவிடப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று லைக்கா நிறுவனம் விஜயை வைத்து மீண்டும் படம் எடுக்க தேதி கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular