Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ கிளைமேக்ஸில் வாய்ஸ் ஓவர் கொடுத்த போது.. உலகநாயகனுடன் இணைந்து நிற்கும் தளபதி.. கமல்ஹாசனை சந்தித்த...

லியோ கிளைமேக்ஸில் வாய்ஸ் ஓவர் கொடுத்த போது.. உலகநாயகனுடன் இணைந்து நிற்கும் தளபதி.. கமல்ஹாசனை சந்தித்த விஜய்.. பரபரக்கும் கோலிவுட்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவில் காட்டி வருகிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, மணி ரத்னம் இயக்கத்தில் ஒரு படம், அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் என்று நடிப்பில் தீவிரமாக இயங்கி வருகிறார். அதேபோல் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களை தயாரித்து வருகிறார்.

- Advertisement -

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ காட்சிகள் வெளியாகியது. இந்தியன் 2 இன்ட்ரோ ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வந்தாலும், அதன்பின் மணி ரத்னம் படத்தின் டைட்டில் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதிரடியான சண்டை காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டைட்டில் வீடியோவின் இறுதியில், தக் லைஃப் என்று டைட்டில் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நாயகன் படத்தில் கமல்ஹாசன் நடித்த நிலையில், இந்த படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் நாயகன் படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கேற்றபடி இந்த படத்திலும் நாசர் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அதேபோல் த்ரிஷா, ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் லியோ படத்தின் இறுதி காட்சியில் கமல்ஹாசன் விஜயிடம் பேசுவது போல் காட்சிகள் வரும். அதில் யாரென்று தெரிகிறதா? என்ற கேள்விகளுடன் காட்சி நிறைவு பெறும். இதன் மூலம் லியோ படம் எல்சியூவில் இணைக்கப்பட்டதாக ரசிகர்கள் கொண்டாடினர்.

- Advertisement -

இந்த நிலையில் லியோ படத்திற்காக வாய் ஓவர் கொடுத்த போது நடிகர் கமல்ஹாசன் – விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் லியோ படக்குழுவான லோகேஷ் கனகராஜ், விஜய், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இதனால் விரைவில் விஜய் – கமல்ஹாசன் இருவரும் திரையில் இணைவார்கள் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular