Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஇவ்வளவு நெருக்கமா.. கத்ரினா கைஃபுடன் விஜய் சேதுபதி என்ன பண்ணிருக்காரு.. தெறிக்கவிடும் மெரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர்

இவ்வளவு நெருக்கமா.. கத்ரினா கைஃபுடன் விஜய் சேதுபதி என்ன பண்ணிருக்காரு.. தெறிக்கவிடும் மெரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர்

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த விஜய் சேதுபதி, தர்மதுரை, 96 உள்ளிட்ட படங்களின் மூலமாக நட்சத்திரமாக உருவாகினார். அதேபோல் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இருந்து வாய்ப்புகள் குவிந்தது. அதேபோல் பாலிவுட்டில் ஃபர்சி வெப் சீரீஸில் நடித்த விஜய் சேதுபதி, அதன்பின் மும்பைக்கர் படத்திலும் நடித்தார். இதனை தொடர்ந்து உச்ச நடிகரான ஷாரூக் கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். 

இவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டப்பட்ட நிலையில், அடுத்ததாக பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கத்ரினா கைஃப், காயத்ரி, ராதிகா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். 

- Advertisement -

இந்த படத்தில் தமிழ் இளைஞராகவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் வகையில் காட்சிகள் படமாக்கபப்ட்டுள்ளது.  இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லர்கள் வெளியாகியுள்ளன. தமிழ் ட்ரெய்லர் அந்த உலகத்திற்கான அறிமுகமான வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தி ட்ரெய்லர் படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகளோடு வெளியாகியுள்ளது.

- Advertisement -

ட்ரெய்லரிலேயே விஜய் சேதுபதிக்கு கத்ரினா கைஃப் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி மிரட்டிவிட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இந்த படம் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular