Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் சேதுபதி, மஞ்சு வாரியருக்கு டீ.. ஏஜிங்.. பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்கும் வெற்றிமாறன்.. பல திருப்பங்களுடன்...

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியருக்கு டீ.. ஏஜிங்.. பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்கும் வெற்றிமாறன்.. பல திருப்பங்களுடன் விடுதலை-2!

கோலிவுட் இயக்குநர்களில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விடுதலை பாகம்-1 படம் நல்ல வரவேற்பை குவித்தது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

விடுதலை பாகம்-1ஐ கொண்டாடிய ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். அதேபோல் வெற்றிமாறனும் படப்பிடிப்பை தீவிரமாக எடுத்து வருகிறார். தற்போது வெளியான தகவலின்படி, அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வெளியீடுக்கு படம் தயாராகிவிடும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் இருக்கும் பல சுவாரசியமான தகவல்களும் கசிந்துள்ளன.

அதன்படி நடிகை மஞ்சுவாரியாரும், நடிகர் பிரகாஷ் ராஜ், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது. பிளாஷ்பேக் காட்சிகளில் மஞ்சுவாரியார் இருப்பார் என்றும், விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரை இளமையாக காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிகிறது.

அதேபோல் விஜய் சேதுபதிக்கு 3 முக்கிய சண்டை காட்சிகளை வைத்திருக்கிறார் வெற்றிமாறன். தற்போது வெளியான தகவலின் மூலம் திரைக்கதை நிச்சயம் பல திருப்பங்களை கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதி இடையிலான காதல் காட்சிகள் மற்றும் விஜய் சேதுபதி ஆசியராக பணியாற்றிய காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய் சேதுபதி போராளியாக மாறியதற்கான அழுத்தமான காரணங்கள் என்ன என்பது பற்றியும் வெற்றிமாறன் திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்ய காட்சிகள் உருவாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

Most Popular