Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainment50வது படத்தின் ஷூட்டிங் முடிஞ்சு போச்சு.. ரெட்ரோ லுக்கிற்கு மாறிய விஜய் சேதுபதி.. யாரு படத்திற்கு...

50வது படத்தின் ஷூட்டிங் முடிஞ்சு போச்சு.. ரெட்ரோ லுக்கிற்கு மாறிய விஜய் சேதுபதி.. யாரு படத்திற்கு தெரியுமா?

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சூது கவ்வும் என்று வித்தியாசமான படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, திடீரென விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம், ஜவான் என்று வித்தியாசமான வில்லனாகவும் நடித்து அசத்தினார். தற்போது விஜய் சேதுபதி குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 50வது படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை மம்தா மோகன்தாஸ், இயக்குநர் அனுராக் காஷ்யப், முனீஷ்காந்த், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லீக் போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. வித்தியாசமான கதை மூலம் 50வது படத்தை பெரிய ஹிட்டாக்க விஜய் சேதுபதி முயற்சித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்கீஸ் உள்ளிட்ட இந்தி படங்கள் வெளியாகவுள்ளது. அதேபோல் தமிழில் பிசாசு 2, விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதனை தவிர்த்து, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை பணிகள் முடிவடைந்து, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த கதையில் விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக உடலை குறைத்து சிவாஜி ஸ்டைலில் மீசை வைத்து, எம்ஜிஆர் போல் கண்ணாடி போட்டு வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். இதனால் விஜய் சேதுபதியின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular