இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் மோசமான தோல்வியை அடைந்தது. தனது 25வது படம் இவ்வளவு மோசமான தோல்வியை அடைந்தது கார்த்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 25வது படமான சிங்கம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை போல், தனது இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் கார்த்தி.
ஆனால் ஜப்பான் திரைப்படம் கொஞ்சம் கூட ரசிகர்களுடன் ஒன்றாததால், ஒரு வாரம் கூட திரையரங்குகளில் தாக்கு பிடிக்கவில்லை. இதனால் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க வேண்டும் நடிகர் கார்த்தி தீவிரமாக உள்ளார். இதனால் ஒரே நேரத்தில் 2 படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகியுள்ளார். இந்த படத்தில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கி வருகிறார். குடும்ப செண்டிமெண்டை கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அரவிந்த்சாமி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாமல் படக்குழு மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில் சீரியல் நடிகை ஒருவரை படக்குழு நாயகியாக முடிவு செய்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி சுவாதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சீரியலில் இருந்து நட்சத்திரங்கள் வளர்ந்துள்ளதால், அந்த வரிசையில் இவரும் இணைவார் என்று பார்க்கப்படுகிறது.