Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசினிமாபோண்டா மணி திருமணத்திற்கு உதவிய நடிகர் விஜயகாந்த்.. வெளியான நெகிழ்ச்சி தகவல்

போண்டா மணி திருமணத்திற்கு உதவிய நடிகர் விஜயகாந்த்.. வெளியான நெகிழ்ச்சி தகவல்

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அது மட்டுமல்லாமல் அரசியலிலும் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். விஜயகாந்த் உழைப்பால் முன்னேறி படங்களில் நடித்து தனக்கு தனி ரசிகன் பட்டாளத்தை கொண்டவர்.

- Advertisement -

நடிகர் விஜய்காந்த் எப்போதுமே ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் வள்ளல். விஜயகாந்த் வீட்டில் எப்போதுமே மதியவேளை இலவச சாப்பாடு கிடைக்குமாம். சினிமா துறையில் எத்தனையோ இயக்குனர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது எல்லாம் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றால் சாப்பிட்டு கிடைக்குமாம்.  இந்த நிலையில் விஜயகாந்த் நடிகர் போண்டாமணிக்கு செய்த உதவி தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் நடிகர் விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தபோது நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

நடிகர் போண்டா மணிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. நடிகர்களுக்கு திருமணம் செய்வதற்காக நடிகர் சங்கம் சார்பாக மண்டபம் ஒன்று இருக்கிறது. இதனால் அங்கு சென்று திருமணத்தை வைத்துக்கொள்ள போண்டா மணி சார்பாக நிர்வாகத்திடம் கேட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அப்போது மண்டபத்திற்கு ஏற்கனவே வேறொரு புக்கிங் வந்து விட்டதாகவும், இதனால் திருமணத்தை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் பதில் வந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த்,உடனடியாக நிர்வாகியை அழைத்து  திருமணத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை மீண்டும் கொடுத்து விடுங்கள்.

இது நடிகர்களுக்காக கட்டப்பட்ட மண்டபம். இங்கு நடிகர்களின் திருமணத்திற்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறி போண்டா மணி திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். இது போன்று பல்வேறு உதவிகளை நடிகர் விஜயகாந்த் செய்திருக்கிறார்.

Most Popular