Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்ன சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்துட்டாங்க.. டைம் டிராவல்னாலும் எல்லை மீறி போறீங்கடா.. மிரட்டலாக வெளியான...

என்ன சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்துட்டாங்க.. டைம் டிராவல்னாலும் எல்லை மீறி போறீங்கடா.. மிரட்டலாக வெளியான மார்க் ஆண்டனி ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக நடித்து வரும் விஷால், இரும்புத்திரை படத்திற்கு பின் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான சக்ரா, எனிமி, லத்தி, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் மற்றும் பஹீரா என்ற காவியப் படங்களை இயக்கிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்தார்.

- Advertisement -

மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் விஷால் மட்டுமல்லாமல் எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், சுனில், அபிநயா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்.15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளம்பரப் பணிகள் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விஷால் வெவ்வேறு லுக்களில் வந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதேபோல் பிளே பாயாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யா, ரவுடிகளுக்கு டிசிப்ளின் வேண்டும், பொம்பள சோக் கேக்குதோ என்று வசனம் பேசி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் திரும்பும் திசையெல்லாம் துப்பாக்கி சத்தம் வெடிக்க, இன்னொரு பக்கம் அடல்ட் வசனங்களால் இளைஞர்களை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதேபோல் முதல் மற்றும் கடைசி காட்சியில் சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்தது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ட்ரெய்லரில் AAA படத்தின் சாயல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் மார்க் ஆண்டனி படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்று புரட்சி தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Most Popular