Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentமார்க் ஆண்டனி படத்துக்காக முதல் முறையாக பாடிய புரட்சி தளபதி விஷால்… ஆனா அதுலயும் வச்சாங்க...

மார்க் ஆண்டனி படத்துக்காக முதல் முறையாக பாடிய புரட்சி தளபதி விஷால்… ஆனா அதுலயும் வச்சாங்க பாரு டுவிஸ்ட்… என்ன இப்படி இறங்கிட்டாரு விஷாலு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் தெலுங்கு பாடலை, நடிகர் விஷால் பாடியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

- Advertisement -

பாட்ஷா இல்ல மார்க் ஆண்டனி

விஷால் நடித்த லத்தி படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாள் அன்று வெளியானது.

அந்த போஸ்டரில் தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வேறமாதிரி இருந்தார் விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி, கேங்ஸ்டர் ஜானரில் ரெட்ரோ ஸ்டைல் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு மாஸ்ஸான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

வரவேற்பை பெற்ற டீசர்

சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் விஷால் தந்தை மகன் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதே போல் வில்லனாக நடிக்கும் எஸ் டி சூர்யாவும் தந்தை மகன் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் டீசரில், செல்போனில் டைம் ட்ராவல் செய்வது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றன. அன்பானவன் அசாராதவன் அடங்காதவன், பகீரா பட தோல்விகளால் துவண்டிருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

விஷால் குரலில் மார்க் ஆண்டனி பாடல்

இந்த படத்தில் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘அதிருதா மாமே’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். வருகிற 15ஆம் தேதி இப்பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் தெலுங்கு பதிப்பை விஷால் பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. விஷாலின் குரலில் பாடல் வேற லெவலில் இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது

Most Popular