Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentமார்க் ஆண்டனி மெகா வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஷால்.. ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.....

மார்க் ஆண்டனி மெகா வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஷால்.. ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

சிலம்பரசன் நடிப்பில் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் என்ற மெகா காவியத்தை கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்த திரைப்படம் மார்க் ஆண்டனி. ட்ரெய்லர் மற்றும் டீசர் கொடுத்த எதிர்பார்ப்பால் திரையரங்கில் சென்று பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. 

- Advertisement -

டைம் மெஷின், கேங்ஸ்டர், இசை, நடிப்பு மற்றும் சில்க் ஸ்மித்தா என்று ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாட ஏராளமான காட்சிகளை வைத்திருந்தார். படத்தின் முதல் 20 நிமிடங்கள் மிதவேகத்தில் சென்றாலும், டைம் மிஷின் விஷாலின் கைகளுக்கு சென்ற பின், வெளிவரும் உண்மைகள், எஸ்ஜே சூர்யாவின் உண்மை முகம் என்று அடுத்தடுத்து காட்சிகளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்தார்.

குறிப்பாக இடைவெளி காட்சியில் எஸ்ஜே சூர்யா எடுக்கும் விஸ்வரூபமும், அதன்பின் விஷால் கொடுக்கும் ட்விஸ்ட் என்றும் ஆட்டம் ஆரம்பமானது. அதன்பின் எஸ்ஜே சூர்யாவை கொன்று விடுவதால், ஒட்டுமொத்தமாக ஆட்டமே தலைகீழாக மாறுவதும், விஷால் இடத்திற்கு எஸ்ஜே சூர்யாவும், எஸ்ஜே சூர்யாவின் இடத்தில் விஷாலும் வந்த நடக்கும் சேட்டைகளுக்கு திரையரங்கமே அதிர்ந்தது.

- Advertisement -

அதன்பின் எஸ்ஜே சூர்யாவின் கைகளுக்கு டைம் மெஷின் சென்ற பின், தந்தை மகன் எஸ்ஜே சூர்யா பேசிக் கொள்ளும் காட்சிகளும் வேற லெவல் கொண்டாட்டத்தை கொடுத்தது. இறுதியாக மொட்டை போட்டுக் கொண்டு அனகோண்டா விஷாலும் களத்தில் இறங்கி ஆடிய ட்கக் லைஃப் ஆட்டமும் வேற மாதிரி மகிழ்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

இந்த படம் 25 நாட்களை திரையரங்களில் ஓடி முடித்துள்ள நிலையில், நடிகர் விஷால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் அக்.13ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular