Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainment”தெறி” இந்தி ரீமேக்.. சமந்தா கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷ்.. இன்னொரு நாயகியாக யார் பாருங்க!

”தெறி” இந்தி ரீமேக்.. சமந்தா கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷ்.. இன்னொரு நாயகியாக யார் பாருங்க!

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ், ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அஜய்தேவ்கன் ஜோடியாக ‘மைதான்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருந்தார். அப்போது உடலை மிகவும் குறைத்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் அதில் பிரியாமணி நடித்தார்.

- Advertisement -

இருப்பினும் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று ஒரு ரவுண்டு வருகிறார். அதேபோல் முன்பை போல் ஹோம்லி கதாபாத்திரம் மட்டுமல்லாமல், கவர்ச்சிக்கும் ஒத்துழைப்பால் தயாரிப்பாளர்கள் சம்பளத்தை கொட்டி கொடுக்கவும் தயாராக உள்ளார்கள்.

இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ இந்தி ரீமேக்கில் வருண் தவண் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும், சினி 1 ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழில் ஜீவா நடிப்பில் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தெறி இந்தி ரீமேக்கில் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தெரிய வந்தது. இந்தப் படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார். அனுஷ்கா சர்மாவுக்கு பின் ஜான்வி கபூர் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையி, அந்த படத்தை கீர்த்தி சுரேஷ் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் தெறி படத்தில் சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் என்று இரு நாயகிகள் இருப்பார்கள். ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், ஏமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாடர்ன் லவ் – சென்னை தொடரில் நினைவோ ஒரு பறவையில் நடித்த வாமிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே இவர் ஜெயம் ரவியுடன் ஜீனி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதனால் தெறி படத்தின் இந்தி ரீமேக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாலிவுட் நாயகிகளின் சம்பளம் அதிகமென்பதாலேயே, தென்னிந்திய நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Most Popular