Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாகடைசி நேரத்தில்.. நீ நடிக்க வேண்டாம் வீட்டுக்கு கெளம்பி என துரத்தி விடுவார்.. வடிவேலுவின் உண்மையான...

கடைசி நேரத்தில்.. நீ நடிக்க வேண்டாம் வீட்டுக்கு கெளம்பி என துரத்தி விடுவார்.. வடிவேலுவின் உண்மையான முகத்தை கிழித்து எரிந்த நடிகை ஆர்த்தி.. !

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் வடிவேலு. ஆனால் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு வெளியில் அவரின் குணத்தைப் பற்றி பல்வேறு நடிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அண்மையில் அவருடன் இணைந்து நடித்த ஆர்த்தி மற்றும் கனேஷ்கர் இது குறித்துப் பேசியுள்ளனர்.

- Advertisement -

நடிகர் சித்ர லக்ஷ்மணன் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் நடிகர் வடிவேலுவுடன் பணியாற்றிய போது சந்தித்த துயரங்களையும் அவமானங்களையும் ஓப்பனாக பேசியுள்ளனர். சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கூட வராததால் வடிவேலுவின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல அடுத்தடுத்து வடிவேலுவின் மோசமான நடத்தை மேலும் அவரின் இமேஜை கீழே தாழ்த்துகிறது. 2000களில் நடிகர் வடிவேலு உச்சியில் இருந்தார். அப்போது அவரின் இடத்தைப் பாதுக்காக்க நல்ல திறன் உள்ளோர்களை மேலே வர விடாமல் தடுதுள்ளார்.

- Advertisement -

நேர்காணலில் ஆர்த்தி கூறியதாவது, “ வடிவேலு மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவருடன் நம் நடிக்கும் போது நன்றாக நடுதுவிட்டால், அந்த சீனை படத்தில் இருந்து நீக்கச் சொல்லிவிடுவார். நம் பிறகு சென்று ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டால் உடனே, அது தேவை இல்லாத சீன் செல்லம். நாம் வேறு பெரிதாக பண்ணுவோம் என சொல்லி கடந்து சென்றுவிடுவார். “

- Advertisement -

உடன் பேசிய நடிகர் கனேஷ்கருக்கு இதை விட பெரிய கொடுமை எல்லாம் செய்துள்ளார். அவர் பேசியதாவது, “ நான் ஒரு படத்துக்கு மேக்கப் போட்டுவிட்டு ரெடியாக வந்து நிற்கும் போது, இந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டோம். உனக்கு இந்த சின்ன ரோல் எல்லாம் நன்றாக இருக்காது. நாம் பெரிதாக அடுத்தப் படத்தில் பண்ணலாம் என வீட்டுக்கு போகச் சொன்னார். ”

மேலும், “ வடிவேலு அவருடைய நபர்களுக்கு மட்டும் தான் எல்லாம் செய்துக் கொடுப்பார். இல்லை என்றால் இப்படி தான் செய்துவிடுவார். ” என இருவரும் தாங்கள் சந்தித்த துயரங்களை சிரித்துக் கொண்டே கூறினர். வடிவேலு குறித்து இவர்கள் மட்டுமல்ல உடன் பணியாற்றிய சிங்கமுத்து முல் சிறிய நடிகர்கள் வரை அனைவரும் மோசமாகத் தான் கூறியுள்ளனர்.

Most Popular